பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ஒன்றும், அதிகமாகக் காணப்படும் பாடல்கள் ஆறும் இன்னும் எஞ்சியுள்ளன. கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் தேனாம் பேட்டை முருகன் கோயிலில் நிகழ்ந்தபோது, இந்த நூறு பாடல் களுக்கும் விளக்கம் சொல்லி, அதிகப் பாடல்கள் ஆறுக்கும் தொடர்ந்து விளக்கம் கூறி, கடைசியில் பயனாக உள்ள பாடலுக்கு விரிவுரை கூறினேன். அந்த முறையைப் பின்பற்றியே, இந்த 18-ஆவது புத்தகத்தில் நூறாவது பாடலோடு நிறுத்தி, அடுத்த புத்தகத்தில் அதிகப் பாடல்கள் ஆறின் விரிவுரையையும், பயனாக உள்ள பாடலின் விரிவுரையையும் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இருபதாவது புத்தகத்தில் கந்தர் அலங்காரப் பாடல்கள் எல்லாவற்றிலும் காணப்படும் சொல், பொருள் முதலியவற்றைப் பற்றிய ஆராய்ச்சியைச் சிறிது விரிவாகவே எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். புத்தகம் முழுவதுமே ஆராய்ச்சியாக இருக்கும். முருகனுடைய புகழை அருணகிரியார் எடுத்துச் சொல்லும் முறை, அவனால் அவர் பெற்ற அநுபவங்களின் வகை, அவர் நமக்குக் கூறும் உபதேசங்கள், அவர் பாடல்களிலுள்ள சொல் நயம், பொருள் நயம், அரிய கருத்துக்கள், அவருக்கே உரிய தனி முறைகள், அவரிடம் உள்ள சிறப்பு இயல்புகள் ஆகிய பலவற்றை ஆராய்வதற்கு இடம் இருக்கிறது. முருகன் திருவருள் அந்த ஆராயச்சியையும் முற்றுவித்து இந்த அலங்கார வரிசையை நிறைவுறுத்தும் என்று நம்புகிறேன். ★ இந்தப் பாடல்களில் முருகனை முன்னிலைப்படுத்திக் கூறும் பாடல்கள் இரண்டு (4, 5): மயிலை முன்னிலையாக வைத்துப் பாடியது ஒன்று (2); படர்க்கைப் பரவலாக உள்ளவை மூன்று (1, 3, 6). முதல் பாட்டு, வேறுபாடற்ற உணர்வு வந்தால்தான் இறைவனுடைய அருளநுபவம் கிடைக்கும் என்பதைக் கூறுகிறது. மயிலின் பெருமையை இரு வேறு வகையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் பாடுகின்றன. இரண்டு பாடல்கள் முருக னிடம் விண்ணப்பித்துக்கொள்ளும் உருவில் அமைந்துள்ளன. இறுதிப் பாடல் அவன் திருவருளால் பெற்ற நிரந்தர விடுதலை 239