பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 யையும் அதற்குக் காரணமான அடியார் உறவையும் அழகாக சொல்கிறது. அருணகிரியார் கூறும் அருளநுபவச் செய்திகள் மிகச் சிறப்புடையன. இதில் உள்ள முதற் பாட்டும் இறுதிப் பாட்டும் அதைச் சொல்கின்றன. யான், தான் என்று வேறுபாடு கண்டு. உரைக்கும் நிலை யொழிந்து மோன நிலை பெற்றால் சான்று ஆரும் அற்ற தனி வெளியில் முருகனோடு ஒன்றி இன்புறலாம் என்று முதற் பாட்டுச் சொல்கிறது. இடம் கடந்த அந்த இடத்தை யும் அநுபவத்தையும், "முருகன் க்ருபாகரன் சான்று ஆரும் அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பது" என்று சொல்லுகிறார். இறுதிப் பாடல் ஜீவன் முக்த நிலையைச் சொல்கிறது. இறைவனுடைய அடியார்களோடு இணங்குவதனால் இருவினைப் பற்று அற, சரீ அபிமானம் நீங்க, என்றும் பிறவியே இல்லாத நிலையை முருகன் அருள் செய்தான் என்று அப்பாடல் கூறுகிறது. கந்தர் அலங்காரத் தின் இறுதிப் பாடலாகிய அது நிறைவைக் கூறுவதாக இருக்கிறது. க்ருபாகரன், கந்தன், கொற்றவேள், செங்கோடை வெற்பன், பெருநிலம் சூகரமாய்க் கீன்றான் மருகன், மயில் வாகனன், முருகன், வேல் முருகன், வேலோன் என்றும் திருநாமங்கள் இந்த ஆறு பாடல்களில் வருகின்றன. முருகன் கிரெளஞ்ச மலையை அட்ட பராக்கிரமச் செயலை ஒரு பாடலில் காண்கிறோம். முருகனுடைய வாகனமாகிய மயிலின் பெருமையைத் தனியே கூறிப் போற்றுவது அருணகிரிநாதர் வழக்கம். இங்கே இரண்டு பாடல்கள் அதன் பெருமையை எடுத்துரைக்கின்றன. ஒரு பாட்டு மயிலையே முன்னிலைப்படுத்திப் பாடியது. மற்றொன்று படர்க்கையில் வைத்துப் பாடியது. ஒன்று, அது சுதந்திரமாய் இட எல்லை கடந்து நிற்பதை விரிக்கிறது. மற்றொன்று, ஆதிசேடன் அதனால் படும் பாட்டை ஒரு கற்பனைக் காட்சியாக அமைத்துச் சொல்கிறது. தடக்கொற்றவேள் மயில், செழுங்கலபி என்று இந்தப் பாடல்களில் அதனைப் பாராட்டுவதன்றி, வேறு ஒரு பாட்டில், 'தூவிக் குலமயில் என்று சிறப்பிக்கிறார். திருமாலினுடைய வராகாவதாரச் சிறப்பை ஒரு பாட்டில் பார்க்கிறோம். தொல்லைப் பெரு நிலம் சூகரமாய்க் கீன்றானாக அங்கே வருகிறார். காசினியைப் பாலிக்கும் மாயன்' என்று 24C)