பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ஓரிடத்தில் அறிமுகப்படுத்துகிறார். அவருக்குப் பாயலாக உள்ள அனந்தனையும், அவர் திருக்கரத்தில் படைகளாக உள்ள சங்கு சக்கரத்தையும் காண்கிறோம். உவமையாகவும் உருவகமாகவும் சிலவற்றை எடுத்தாண்டு கருத்துக்களைச் சுவைபட விளக்குகிறார் அருணகிரியார், ஒரு நாளைக்கு ஒரு நாள் மாறிக்கொண்டே வரும் இந்தப் பொய் வாழ்வை, "நதிதனையன்ன பொய்வாழ்வு” என்று உவமிக்கிறார். முருகன் திருவடியைக் கமலக் கழல் என்று பாடுவது புதியதன்று. துணையில்லாமல் வாடும் நிலைக்குக் கொழுகொம்பு இல்லாமல் வாடும் தனிக் கொடியின் நிலையை உவமையாக்குகிறார்: "தாவிப் படரக் கொழு கொம்பிலாத தனிக்கொடிபோல், பாவித் தனி மனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று கூறுகிறார். இந்த உடம்பை நரம்பாற் பொதிந்த பொதி என்று உருவகம் செய்கிறார். உடலைச் சிறைய..கவும், பாச வினையை விலங்காக வும் சொல்லுகிறார். "சதிதனை யொன்றையும் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்வில்அன் பாய்நரம் பாற்பொதிந்த பொதிதனையும்கொண்டு திண்டாடு மாளெறனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந்திங்கேயென்றன்மனம் வேகின்றதே" என்ற பாட்டு, மாணிக்கவாசகர் பாடல் ஒன்றை நினைப்பூட்டு கிறது: 'செழுக்கமலத்திரளனநின் சேவடிசேர்ந்தமைந்த பழுத்தமனத்தடியருடன் போயினர்யான், பாவியேன் புழுக்கனுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமணத் தடியேன் உடையாய்நின் அடைக்கலமே.” பெரும் பொருள் பெற்றவர்களும், "கோடி கோடியாகப் பணம் படைத்துக் குபேரர்களைப் போல வாழ்கிறவர்கள் இருக்கிறார்களே! அப்படி எங்களுக்குக் கிடைக்கவில்லையே!" என்று சொல்வது உலக இயல்பு. அருள் பெற்றவர்களுக்குக்கூட இத்தகைய ஆராமை இருக்கும் போலும்! இந்த ஆறு பாடல்களில் முதல் பாடலுக்கு உரை காணும் போது, 'யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி" 241.