பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உண்மையை வற்புறுத்தியிருக்கிறார்கள். இறைவனுடைய திரு வருளைப் பெற்றவர்கள், செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் சேருவது என்பது மட்டும் அல்ல; இம்மை வாழ்விலேயே அத னுடைய சுவையைப் பெறலாம் என்பதை சுருதி யுக்தி அநுபவங் களால் பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த உலகத்தில் வாழும்போது முக்தி இன்பத்தை நுகர்கிறவர்கள் சீவன்முத்தர்கள் என்று பெயர் பெறுவார்கள். சங்க காலத்திலேயே இப்படி ஒரு வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை மக்களுக்கு இருந்தது. 'தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவை மான' என்று பத்துப் பாட்டில் வருகிறது. 'தவம் செய்கின்ற பெரிய வர்கள் தம்முடைய உடம்பை விட்டுவிட்டு இறப்பதற்கு முன்னாலே தவத்தின் பயனாகிய சீவன் முத்த நிலையை அடைந்தது போல: என்பது இதனுடைய கருத்து. ஆகையால் இந்த உடம்பு இருக்கும்போதே இறை அருள் இன்பத்தைப் பெறலாம் என்ற உண்மை அந்தப் பழங் காலத்து மக்களுக்கே புலனாகியிருந்தது என்று தெரியவருகிறது. தாயுமானவர், 'இத்தேகமொடு காண்பனோ' என்று சொல்வார். 'சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போதே வீடு' என்று நம்மாழ்வார் பாடுகிறார். இத்தகைய சீவன் முத்த நிலையை அடைவது எளிது அன்று. ஆனால் சாத்தியம். உபநிடதங்களும், சமய நூல்களும் இந்த நிலை மனிதனாலே அடைவதற்குரியது என்று சொல்கின்றன. அடைந்தவர்களும் தம்முடைய அநுபவத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அடைந்தவர்களில் ஒருவர் அருணகிரிநாதர். அருணகிரியார் அறிவுரை அவருடைய திருப்பாடல்களில் நம்மைப் போன்ற மக்களுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பல. நம்முடைய துன்ப அநுபவங் 246