பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 எழும். ஆனால் அந்தச் சங்கத்தினின்றும் பிரிந்து போனால் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகி விடுகிறது. அவ்வாறு உண்டாவதற்குக் காரணம் என்ன? நம்மிடத்தில் நல்ல இயல்பு ஒன்றும், கெட்ட இயல்பு ஒன்றும் இருக்கின்றன. நல்லவற்றை ஒருவர் சொல்லும்போது கேட்கத் தெரிகிறது. ஒரளவு விளங்குவது போலவும் இருக்கிறது. அத்தகைய அநுபவங் களை நம்முடைய முயற்சியே இல்லாமல் பிறர் நம்மிடம் சார்த்தினால் பெறுவதற்குச் சித்தமாக இருக்கிறோம். நாமாக முயன்று அதைப் பெறுவது இல்லை. பிறர் விளைவித்துத் தருகிற காய் கறிகளை நாம் பெற்று உண்பதற்குத் தயாராய் இருக்கி றோம். ஆனால் நாமே உழுது, உரம் போட்டு, செடிகொடிகளைப் பயிர் பண்ணி, பொறுமையாகக் காத்திருந்து அந்த முயற்சியால் வரும் பலனைப் பெற்று வாழ விரும்புவதில்லை. நல்லோர் கூட்டுறவு பஜனை செய்கிறவர்களும், உயர்ந்த உண்மைகளை உபதேசிக் கின்ற பெரியவர்களும் உண்மையிலேயே சிறந்த பாகவதர்களாக வும், பக்தர்களாகவும் இருந்தால் அவர்களைச் சாரும்போது நமக்குக் கிளுகிளுப்பு உண்டாகிறது. அதற்குக் காரணம் நம் முடைய மனம் ஓரளவு அவற்றைப் புரிந்து கொள்கிற பக்குவத் தில் இருப்பது. அதைவிடப் பெரிய காரணம் அந்தப் பாக வதர்களும், பெரியவர்களும் பலகாலமாக முயற்சி பண்ணி, சாதனையை ஓரளவு பெற்று, பின்பு தம்மைச் சார்ந்தவர்களிடமும் ஒருவகை உணர்ச்சியை உண்டாக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது தான். நாம் அவர்களைச் சார்ந்து சில மணி நேரம் ஒருவகையான கிளுகிளுப்புக்கு ஆளாகிறோம். அது நம்முடைய மனக் கவலையைப் போக்கி அமைதியான நிலையை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்கிறோம். அத்தகைய பெரியவர்களுடைய சங்கத்திற் பழகியதற்குப் பயன் அப்போதைக்கு ஒருவகைக் கிளுகிளுப்பைக் கொள்ளுவது என்று நிற்கக் கூடாது. அது நீண்டு நிலைக்க வேண்டுமென்றும், அவர்களோடு சாராமலே நமக்கு அத்தகைய உணர்ச்சி எழவேண்டுமென்றும், நாளடைவில் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அத்தகைய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்றும் நாம் ஆசைப்பட வேண்டும். அந்த ஆசை 248