பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி முறுக முறுக அதற்கேற்ற முயற்சி நம்மிடம் உண்டாகும். சாதனை வலுப்பெறும். சோதனைகளுக்கிடையே நம் சாதனை வெற்றி பெற்று முடிவில் அநுபவ உலகத்தில் அடி எடுத்து வைப்போம். இப்படி அமைதியாக வாழ்வதற்கு ஒரு வழி உண்டென்று, பெரியவர்களிடம் பழகுவதால் தெரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் கவலைப்படவும், பிறனுடைய உயர்வைக் கண்டு பொறாமைப்படவும் பிறனுடைய துயரைக் கண்டு இரங்காமல் இருக்கவும் நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு நேர் மாறாக, உலகம் எல்லாம் இறைவன் படைப்பு என்றும், சுகதுக்கங்கள் நம்முடைய மனம் காரணமாக வருவன என்றும் எண்ணி, நம்முடைய மனத்தை நடுநிலையில் வைத்துக் கொள் வதற்கு மெல்ல மெல்லப் பழகிக் கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் எளிதில் வராது. பெரியவர்களுடைய சங்கத்தினால் அப்படி ஒன்று இருப்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதனால் நன்மை உண்டாகும் என்பதைத் தெளிந்து கொண்டு முயன்றால் அது நமக்கும் கிடைக்கும். நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக் கையை முன்னால் பெற்றுப் பின்பு முயல வேண்டும். இதற்குத் தான் அடிக்கடி நல்லவர்களுடைய கூட்டுறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. பருவத்துக்கு முன்னும் பின்னும் ஒரு சிறுமி, தனக்கு மங்கைப் பருவம் வராவிட்டாலும் பருவம் வந்த பெண்கள் தங்கள் தங்கள் கணவர்களோடு பழகு வதைக் கண்டு தனக்கும் அப்படி ஒரு நிலை வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். பெண்களோடு சேர்ந்து பெண்களுக்கு உரிய விஷயங்களை எல்லாம் கற்றுக்கொள்கிறாள். பாடுவதும், ஆடு வதும், சமையல் செய்வதும், குழந்தைகளைப் பராமரிப்பதும் ஆகிய காரியங்களைப் பருவம் வராமல் உள்ள பெண்கள்கூடக் கற்றுக்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய தகுதிகளையெல்லாம் பெற்றுப் பிறகு தனக்கென்று ஒரு கணவனை அடைகிறாள். பருவம் வந்த பிறகு அவனால் அடைகிற இன்பத்தைப் பெறுகிறாள். சமையல் செய் வதும், குழந்தைகளைக் காப்பாற்றுவதும், வீட்டைத் துப்புரவாக 249