பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி கல்வி மனிதனுக்கு அறிவு இயல்பாக இருந்தும் அது சிறப்பது இல்லை; விளக்கம் பெறுவது இல்லை. அறிவு விளக்கம் பெறு வதற்குக் கல்வி தூண்டுகோலாக அமைகிறது. அறிவு கல்வி யினால் விளக்கம் பெறும் என்பதை, 'தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துாறும் அறிவு” என்னும் குறள் சொல்கிறது. பல நூல்களைப் படித்துப் படித்துப் பலருக்கு ஐயங்கள் உண்டாவது உண்டு. கல்விக்குப் பிறகு கேள்வி என்ற படி இருக்கிறது. கேள்வியினால் ஐயம் தீரும். கல்வியைவிடக் கேள்வி சிறந்தது. நூல்களைப் படிக்கத் தெரியாத வர்கள்கூடக் கேள்வியினால் சிறந்த அறிஞர்களாகியிருப்பதைப் பார்க்கிறோம். பழங்காலத்தில் இந்த நாட்டுப் பெண்மணிகள் பலர், நூலைப் படித்து அறிய முடியாவிட்டாலும் கேள்வி யினால் பல செய்திகளைத் தெரிந்துகொண்டிருந்தார்கள். கேள்வியின் சிறப்பு ஓர் ஆண்டுக்கு முன்னால் அவரை காய்த்திருந்தது. காய் களைப் பறித்து வற்றல் போட்டு வைத்திருக்கிறோம். இந்த ஆண்டு அந்த வற்றலை வைத்துக் கொண்டு கூட்டு, குழம்பு முதலியவற்றைச் செய்கிறோம். ஆனால் இந்த ஆண்டும் நாம் அவரைக் கொடி போட்டிருக்கிறோம். முற்றத்திலுள்ள அவரைக் காயைப் பறித்து வந்து அவற்றைக் கொண்டு கூட்டு முதலியன செய்கிறோம். போன ஆண்டு பறித்து வற்றல் போட்டு வைத் திருந்த அவரைக் காயைக் கொண்டு கூட்டுச் செய்வதற்கும், இந்த ஆண்டு இன்றைக்கே தோட்டத்திற்குச் சென்று பச்சை அவரைக் காயைப் பறித்து வந்து கூட்டுச் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. இன்று பறித்தவுடனே கூட்டுப் பண்ணியிருக்கும் அவரைக் காய்க்குச் சுவை மிகுதியாகவே இருக்கும். வற்றலைக் காட்டிலும் பச்சைக் காய் கறி சிறந்தது என்பதை நம்முடைய அன்றாட அநுபவத்தில் உணர்கிறோம். பல காலத்திற்கு முன்னால் பெரிய வர்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எழுதிய நூல் களைப் படிக்கிறோம். அவை ஓரளவு பயன் கொடுக்கக் கூடியது 251