பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கற்க வேண்டும். கற்றபின் கேட்க வேண்டும். நல்ல கேள்வி என்பது உயிருக்கு நலம் தருகிற உபதேசங்களைக் கேட்பது. கல்வி கேள்வி ஆகிய இரண்டும் பெற்றவனுக்கு அறிவு சிறக்கிறது. நல்ல உபதேச நூல்களை நாம் கற்க வேண்டுமென்றும், அப் போது உண்டாகும் ஐயங்களைக் கேள்வியினால் போக்க வேண்டு மென்றும் சொல்வார்கள். கேட்ட பிறகும் கேட்டவற்றைச் சிந் தித்துத் தெளிந்து கொள்ள முயல வேண்டும். கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்று ஐந்து வகையான முயற்சிகள் படிப்படியாக உள்ளன. கற்றல் என்பது அச்சில் இருக்கிற எல்லாவற்றையும் கற்பது ஆகாது. நம்முடைய லட்சியம் எதுவோ அதனை அடைவதற்கு உறுதுணையாக இருப்பனவற்றையே கற்க வேண்டும். 'கல்வி கரையில கற்பவர் நாட்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகில் தெரிந்து' என்பது நாலடி. கல்விப் பரப்புக்கு எல்லையே இல்லை. நாம் எதனைத் தெரிந்து கொண்டால் முன்னேறலாம் என்பதை முதலில் தெரிந்துகொண்டு படிக்க வேண்டும். பழங்காலத்து நூலாசிரியர் கள் இன்ன நூலுக்கு இன்னவன் அதிகாரி என்று முன்னாலேயே சொல்லியிருப்பார்கள். வைத்திய வேலைக்கு வைத்திய நூல்களைப் படிப்பது பயன்; சோதிடம் படிப்பதனால் அந்த வேலைக்குப் பயன் இல்லை. எந்தத் துறையில் நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தத் துறைக்கு ஏற்ற நூல்களைக் கற்பதே நல்லது. - ஆகவே நமக்கு ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியத் திற்கு ஏற்ற நூல்களைப் பயில வேண்டும். நூலறிவினால் தெளி யாமல் உள்ள ஐயங்களைத் தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நல்லவர்களுடன் பழகுவதனால் அவர்கள் வாயி லாகப் பலவற்றைக் கேட்டு ஐயம் நீங்கித் தெளிவு பெறலாம். சிந்தித்தலும் தெளிதலும் : கேட்ட பிறகும் செய்ய வேண்டிய காரியம் உண்டு. கேட்டு அறிந்தவற்றை நாம் தனியே இருந்து சிந்திக்க வேண்டும். 254