பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது ஒழுக்கம் அல்லது நடத்தைக்குப் பெயர். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது இரண்டு ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று ஒருவாறு இவற்றைத் தமிழில் சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை நாம் பக்தர்கள் என்று சொல்கிறோம். பக்தர்களின் செயல்களும் வழி பாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவன் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறான். ஒருவன் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும் தவறாமல் போய்த் தரிசித்து வருகிறான். ஒருவன் நந்தவனம் வைக்கிறான். ஒருவன் குளம் வெட்டுகிறான். இவர்கள் யாவரும் பக்தர்களே. - ஒருவன் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறான். அவன் புகழைப் பாடுகிறான். அவனும் பக்தன்தான். ஒருவன் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறான். ஆடை புனைந்து அணியணிந்து மாலை சாத்தி அலங்கரிக்கிறான். நறுமலரால் அருச்சனை செய்கிறான். தூபதீபம் காட்டுகிறான். உணவை நிவேதனம் செய்கிறான். கற்பூர தீபம் காட்டுகிறான். வலம் வந்து பணிகிறான். அவனும் பக்தியுடையவனே. - பின்னும் ஒருவன் கண்ணை மூடிக் கொண்டு கண்ணிர் வார இறைவனைத் தியானம் செய்கிறான். முதலில் சில நிமிஷங்கள் இப்படி இருந்தவன் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறான். அவனும் பக்தனே. நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் - நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எத்ற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்த்ையும் எனது என்ற 1 &