பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இதில் சிறிதும் ஐயமில்லை. இது உண்மையானது. இது போல அருணகிரியார் சொல்கிறார். யான்தான் எனும்சொல் இரண்டும்கெட் டால்அன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்; தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினால் சான்றாரும் அற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே சந்திப்பது - சேர்தல்; ஒன்றுபடுதல். ஆண்டவனோடு ஒன்று படுகிற இன்பம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இரண்டு தடைகள் போக வேண்டும். "இரண்டும் கெட்டாலன்றிச் சந்திப்பது, தோன்றாது' என்று முடிக்கிறார். இது சத்தியம் என்று வற் புறுத்திச் சொல்கிறார். வெறும் கேள்வியினால் இதைச் சாதிக்க முடியாதாம். தனிவெளி அவன் எங்கே இருக்கிறான்? அவனை எங்கே சந்திப்பது? சான்று ஆரும் அற்ற தனிவெளியில் சந்திக்க வேண்டும். ஒரு சாட்சியும் இல்லாத பாழ்நிலம் அது. வேறு ஒரு சான்று இருந் தால் அது தனிமையாகாதே. நமக்கு இப்போது சரீரம், பொறி புலன்கள், உலகம், பூதங்கள் ஆகிய எல்லாம் சாட்சியாக இருக் கின்றன. இந்தச் சாட்சிகளெல்லாம் உடனிருக்கும் வரையில் அந்தத் தனிவெளிக்குப் போக முடியாது. ஆண்டவன் எல்லா இடங்களிலும் மறைந்து நின்றாலும் அவனை வெளிப்படுத்திக் காண வேண்டும். மற்றப் பொருள்கள் அவனை மறைத்து நிற் கின்றன. அவையற்ற பாழிடந்தான் தனிவெளி. அது மறைப்பு இல்லாத இடம். அங்கே போக வேண்டும். அந்த இடத்தில் அவனும் நாமுமே இருக்க வேண்டும். அது சாட்சி இல்லாத இடம். அது தனிவெளி. இந்தத் தனி வெளியைப் பற்றிக் கந்தர் அலங் காரத்தில் வேறு ஓரிடத்தில் அருணகிரியார் சொல்லியிருக்கிறார். “ஒளியில் விளைந்த உயர்ஞான யூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறும்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே.” 260