பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி அதனை ஞான வெளி என்றும் சிதாகாசம் என்றும் பாழ் என்றும் பலவகையாகச் சொல்வார்கள். 'அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளி' என்று பிறிதோரிடத்தில் சொல்வார். அங்கே இரவு இல்லையாம். பகல் இலலையாம். அந்த இடம் ஒரு பூதர்க்கும் தெரியாதாம். 'சூதான தற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே தெரியாதொரு யூதர்க்குமே” என்பர். “ஒரு பூதரும் அறியாத் தனிவீடு' என்றும் அதையே சொல்வார். தெளிவும், அநுபவமும் இல்லாமல் இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெற இயலாது என்பதை வற்புறுத்திக் கூறவந்த அருணகிரிநாதர், கேள்வியினால் சான்றுஆரும் அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே என்றார். ஆண்டவன் தனி வெளியில் இருக்கும்போது அவனை அணுகினால் அவன் வேறு, நாம் வேறு என்ற எண்ணமே தோன்றாது. யான் - தான் யான், தான் என்ற் இரண்டு சொல்லையும் ஒரு சேரச் சொல்லும்போது அந்த இரண்டு சொல்லுக்கும் உரிய பொருள் வெவ்வேறு என்று தோன்றும். 'நான்வே றெனாதிருக்க நீவே றெனாதிருக்க' என்று அருணகிரியார் திருப்புகழில் பாடுவார். கண்ணுக்குப் புறம்பே மையை வைத்திருந்தால் தனியே கண் மையைத் தெரிந்துகொள் ளும். கண்ணுக்கு இட்டால் அது தெரிவது இல்லை. இறைவனை விட்டுத் தனியாக இருக்கும்போது அவனும் நாமும் வேறு என்று தோன்றும். அவனோடு ஒன்றிக் கலந்த பிறகு யான், தான் என்ற சொற்கள் தோன்றாத அநுபூதி நிலை உண்டாகிறது. எனவே, க.சொ.WI-17 261