பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி சொல் இறந்த நிலை ஒருவனுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து அவன் உடம்பி லுள்ள புண்ணைக் கீறிச் சிகிச்சை செய்ய டாக்டர் முற்படுகிறார். மயக்க மருந்தைக் கொடுக்கும்போது அவனுக்கு உணர்ச்சி இருக்கிறதா இல்லையா என்று சோதிப்பதற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லிக்கொண்டே வரச் சொல்வார். அப்படிச் சொல்லி வரும்போது நோயாளி எப்போது எண்ணுவதை நிறுத்தி விடுகிறானோ அப்போது அவனுக்கு மயக்கம் நன்றாக ஏறி விட்டது என்று டாக்டர் தெரிந்து கொள்வார். அவன் மயக்கமுற்ற நிலை சொல் அடங்குவதனால் தெரிகிறது. சொல் அடங்கும் போது மனமும் நிற்கிறது. அதுபோல் யான் தான் என்னும் சொற்கள் எப்பொழுது அடங்குகின்றனவோ அப்போது அநுபவம் தலைப்படும். அதனால், 'யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றித் தோன்றாது' என்றார். கேள்வியினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று இருப்பவர்களுக்கு அநுபவம் வாராது. சொல் உள்ளவரையில் இன்ப அநுபூதி இல்லை. சுட்டு உள்ளவரையும் அந்த இன்பம் இல்லை. யான் தான் என்ற விவகாரம் இருக்கும் மட்டும் அநுபவம் தோன்றாது. இந்தச் சொல்லிறந்த அநுபவத் தையே முருகன் தனி வெளிக்கே வந்து சந்திப்பது என்று சொல் கிறார். தனி வெளி என்று சொன்னது பெளதிக ஆகாசத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக. ஆகாசங்களில் பலவகை உண்டு. பஞ்சபூதங்களில் ஒன்றான பெளதிக ஆகாசம் வேறு. தகராகாசம் வேறு. சிதாகாசம் வேறு - ஆண்டவன் ஞான வெளியாகிய சிதா காசத்தில் இருக்கிறான். அங்கே போய் அவனைச் சந்திக்க வேண்டும். அப்படி ஒரு வெளி தனியாக இல்லை. நாம் உலகி னின்றும் நழுவி எங்கே மனமற்று இருக்கிறோமோ அங்கே அந்த வெளி நமக்குக் கிடைக்கும். யான் தான் என்னும் இரண்டு சொல்லும் கெட்ட இடத்தில் அந்தத் தனி வெளி வந்து நிற்கும். அங்கே ஆண்டவனைச் சந்திக்கலாம். தனி வெளியில் சந்தித்தல் சான்று ஆரும் அற்ற தனி வெளி 263