பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி திருக்கோயிலில் திருமாலுக்கு இடமில்லாமல் இருக்கலாம். திருமாலின் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் அருணகிரியார் இயற்றிய சொற்கோயிலில் எல்லா மூர்த்திகளும் வருவார்கள். இங்கே முருகப் பெருமானுடைய மாமாவை நினைக்கிறார். காரணம் இல்லாமல் நினைக்கவில்லை. அப்படி நினைப்பதிலும் ஒரு கருத்தைக் குறிப்பாக வைத்திருக் கிறார். முருகன் திருமாலின் மருகன். அதைச் சொல்ல வருகிறார். தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் கீன்றான் மருகன். அடிமுடி தேடிய கதை திருமால் ஒரு முறை வராகாவதாரம் எடுத்தார். பூமியை ஒர் அசுரன் சுருட்டிக் கொண்டு போக, ஆழ்கடலிலிருந்து அதனை மீட்பதற்காக வராகாவதாரம் எடுத்துத் தம்முடைய கொம்பினால் நிலமகளை மீட்டுக் கொண்டு வந்தார் என்பது ஒரு கதை. இது பாகவதத்தில் வருகிறது. சைவர்கள் ஒரு கதை சொல்வது உண்டு. திருமால் வராகாவதாரம் எடுத்ததற்குரிய காரணத்தை அந்தக் கதை சொல்கிறது. திருவண்ணாமலை சம்பந்தமான வரலாற்றில் அந்தக் கதை வருகிறது. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒரு வாதம் எழுந் தது. திருமால், "நான் பெரியவன்' என்றார். பிரமன், "நான் தான் பெரியவன்' என்றான். இந்த இரண்டு பேர்களுக்கு மிடையே தோன்றிய வாதம் முடிந்தபாடில்லை. அப்போது சிவபெருமான் தோன்றிப் பெருஞ்சுடராக நின்று, "என்னுடைய அடியையும் முடியையும் யார் காண்கிறாரோ அவரே பெரியவர்' என்று சொன்னார். அப்போது திருமால் பன்றி உருவம் எடுத்துப் பூமியைத் துளைத்துக் கொண்டு இறைவன் திருவடியைப் பார்க்கப் புறப்பட்டார். பிரமனோ அன்னப் பறவை உரு எடுத்துக் கொண்டு திருமுடியைப் பார்க்கப் புறப்பட்டான். இரண்டுபேரும் காண முடியாமல் திண்டாடினார்கள். அப்போது அவர்களிடத்தில் தோன்றிய அகந்தை மறைந்துவிட்டது. அப்படி உண்டான சுடர் தான் பின்பு அண்ணாமலையாகவும் சிவலிங்கமாகவும் விளங்கு கிறது என்று சிவபுராணம் சொல்கிறது. லிங்கோத்பவ மூர்த்தியின் வரலாறும் இதுதான். 265