பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி பெரியவனாகவும், சில சமயங்களில் திருமால் பெரியவனாகவும் காட்டுவார்கள். நாடக வேஷத்தில் அப்படித் தோற்றுமேயொழிய உண்மையில் இருவரும் வெவ்வேறு அல்லர் என்ற உண்மையை எண்ணிச் சமரச உணர்ச்சி பெற வேண்டும். இது ஒரு கருத்து. மற்றொன்று: திருமாலும், பிரமனும் தாமே பெரியவர் என்று அகங்கரித்தபோது முடிவு கட்டுவதற்குச் சிவபெருமான் சுடராக நின்றார். அந்தச் சுடரை அளவெடுக்க எண்ணிய இரண்டுபேரும் விலங்காகவும், பறவையாகவும் ஆனார்கள். செய்யத் தகாத ஒன்றை மிகச் சிறந்தவர் எண்ணினாலும் அப்போதைக்கு அவர் விலங்கின் நிலையை அடைகிறார் என்ற உயர்ந்த நீதி இதி லிருந்து கிடைக்கிறது. அகங்கரித்ததோடு நிற்காமல் அளவெடுக்கப் படாத ஒன்றை அளவெடுக்கப் புகுந்த அறியாமையினால் ஒருவர் பன்றியாகவும், மற்றொருவர் பறவையாகவும் ஆகிவிட்டார் அலலவா? மற்றொன்று: உயர்ந்தவர்கள் தாழ்ந்து போனாலும் அதிலே யும் ஓர் உயர்வு இருக்கும். திருமால், பிரமன் ஆகிய இரண்டு பேரில் திருமால் உயர்ந்தவர். ஆண்டவனது அடிமுடி காணும் முயற்சியில் சிறந்தது. இறைவனுடைய அடியைக் காண்பது. திருமால் இயல்பாகவே உயர்வானவர். ஆதலின் உயர்ந்த செயலாகிய திருவடியைக் காணும் முயற்சியில் ஈடுபட்டார். பொருத்தம் இனி இங்கே அருணகிரியார் இந்த வரலாற்றைச் சொல் வதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் கீன்றான் என்று பாடுகிறார் அருணகிரியார். மிகப் பழைய பூமியைப் பன்றி உருவம் எடுத்துப் பிளந்து உள்ளே போனார் என்று சொல்கிறார். சிவபரஞ்சுடரின் திருவடியைக் காண்பதற்காகத் திருமால் செய்த காரியம் இது. ஏன் அப்படிச் செய்தார்? அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், யான் என்னும் அகந்தை அவர் உள்ளத்தைக் கப்பிக் கொண்டது. அகங்காரம் யாருக்கு வந்தாலும் அதனால் அறியாமை மிகுமேயொழிய ஒளியைக் காணும் அறிவு 267