பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தட்டுப்படாது என்ற கருத்தைத் திருமால் நாடகம் போட்டுக் காட்டினார். யான் என்னும் அகந்தை போக வேண்டும், அதனால் தான் இன்பம் வரும் என்பதைச் சொல்ல வந்த இந்தப் பாட்டில், அந்த அகந்தையினால் உண்மையைக் காண முடியாமல் தடு மாறிய திருமாலின் கதையை எடுத்துச் சொல்வது பொருத்தம் அல்லவா? உயர்ந்தவர் குற்றம் பண்ணினாலும் அது குற்றமே என்பதைத் திருமால் தம்முடைய செயலால் காட்டினார். யான்தான் எனும்சொல் இரண்டும்கெட் டால்அன்றி யாவருக்கும் தோன்றாது; சத்தியம்; தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினால் சான்றுஆரும் அற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. (பழைய பெரிய பூமியை வராக உருவம் எடுத்து இறைவனுடைய அடியைத் தேடிக்கொண்டு பிளந்து சென்ற திருமாலுக்கு மருகனும் முருகனுமாகிய அருளாளன் வேறு சாட்சியாக யாரும் இல்லாத தனிவெளிக்கு வந்து நம்மைச் சந்திப்பது, யான் தான் என்னும் வேறுபாட்டைக் காட்டும் இனச்சொற்கள் இரண்டும் கெட்டாலன்றி வெறும் கேள்வியினால் தோன்றாது. கெட்டால் அன்றிச் சந்திப்பது கேள்வியினால் தோன்றாது. யான் தான் என்னும் சொல் இரண்டும் இனமானவை. அந்தச் சொல்லைச் சொல்லும் நிலை பேதநிலை. சொற்கெட்டு யானும் தானும் ஒன்றாவதே லட்சியம். தோன்றாது என்பது சித்தியாது என்ற பொரு ளுடையது. தொல்லை - பழமையான சூகரம் - பன்றி. கீன்றான் - கீண்டான்; அகழ்ந்த திருமால். சான்று - சாட்சி. ஆரும் அற்ற என்றாலும் ஒரு தத்துவமும் அற்ற என்பதே கருத்தாகக் கொள்க. தனிவெளி - சிதாகாசம், இதையே பாழென்றும் சூனியமென்றும் சொல்வர். அகந்தை உள்ள வரையில் அநுபவம் கிடைக்காது என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தின் 95ஆவது பாட்டு. 268