பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் மமதையும் இல்லாமல் இருக்கிறான் ஒருவன். அவனும் பக்தன் தான. ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிடத் தானே பூசை செய்கிறவன் சிறந்தவன். அவனை விடக் கண்மூடி அமர்பவன் உயர்ந்தவன். அவனைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவன் மிகச் சிறந்தவன். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண் டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்குரியவை. ஞானியர் நிலை சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல் மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவதடுக்குக்கும் தொடர்பு இல்லையா? மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவதே இல்லையா? அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக் கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்ட வனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடைய வனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். - 亨5