பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் அங்கங்கள் பழங்காலத்து அரசர்களைப் பற்றிச் சொல்லும்போது அங்கரங்க வைபவம் உடையவர்கள் என்று சொல்வது வழக்கம். பல வகையான அங்கங்களைக் கொண்டு தம்முடைய செல்வச் சிறப்பு விளங்கும்படியாக வாழ்வது அந்த அரசர்களுடைய இயல்பு. நாடு, ஊர், ஊர்தி, மாலை, ஆயுதம், சேனை, கொடி, முரசு, பேர், ஆணை ஆகிய பத்து அங்கங்களைத் தசாங்கங்கள் என்று சொல்வார்கள். சாங்கோபாங்கம் என்பது மற்றொரு மொழி. அங்கமும், உபாங்கமும் சேர்ந்து அமைந்தது என்பது அதற்குப் பொருள். அங்கங்கள் மூன்று வகைப்படும். அங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்பன அவை. கை ஓர் அங்கம், கையி லுள்ள விரல் அங்கத்திற்கு அங்கம்; அல்லது உபாங்கம். ஒரு வரைக் கையால் அடிக்கிறோம். விரலினால் தொடுகிறோம். இவை அங்க உபாங்கங்களின் வேலை. வேறு சில சமயங்களில் தடியை எடுத்து அடிக்கிறோம். அந்தத் தடி பிரத்யங்கம்; அங்கத் திற்குப் பிரதிநிதியாக இருந்து உதவுவது. அரசன் பல அங்கங் களை உடையவனாக இருக்க வேண்டும். வாகனம் சிறந்த அரசனுக்கு வாகனம் இன்றியமையாதது. அந்த வாகனத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. பெரும்பாலும் தெய்வங் களுக்குத் தனித்தனியே வாகனங்கள் இருப்பதைப் புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமான் விடையின்மேல் வருபவர். திரு மால் கருடன் மேல் வருபவர். பிரமனுக்கு அன்னம் வாகனம். இந்திரன் ஐராவதம் என்னும் வாகனத்தில் வருபவன். வருணன் மகர மீனை வாகனமாக உடையவன். இப்படியே அந்த அந்தத் தேவருக்கு ஏற்ற வாகனங்களைப் புராணக் கதைகள் சொல் கின்றன. முருகன் சிறந்த தலைவன். எல்லாத் தேவர்களுக்கும்