பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மேலான தெய்வம். அவனுக்கு வாகனம் இருக்கிறது. வெவ்வே, சமயங்களில் வெவ்வேறு வாகனங்களில் அவன் வந்தாலும் அவனுக்கு முக்கியமான வாகனம் மயில். அவன் மயில் ஏறும் பெருமாள். இருவகைப் புகழ் யாரேனும் ஒரு தலைவனைப் பாட வேண்டுமானால் அவனை மட்டும் பாடிக்கொண்டிருப்பது போதாது. அவனுடைய அங்கங் களைப் பாட வேண்டும். உபாங்கங்களைப் புகழ வேண்டும். பிரத்யங்கங்களைப் பாராட்டிப் பேச வேண்டும். அவனுடைய அங்க வகைகளை எல்லாம் பாராட்டுவது அவனைப் பாராட்டு வதற்குச் சமந்தான். இதை நினைத்தே அருணகிரியார் கந்தர் அநுபூதியின் முதல் பாட்டில், 'ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என்று வேண்டிக்கொண்டார். முருகனோடு தொடர்புடைய பொருள்களைப் பாராட்டும்போது அவற்றுக்குள்ள பெருமை யைத் தனியே சொல்வதில்லை. முருகனுடைய பெருமையையும் இணைத்துச் சொல்வார். பாலைத் தனியே உண்ணுகிறோம். பாலைக் கொண்டு செய்த பணியாரங்களை உண்ணும்போதும் பாலை உண்கிறோம். அப்படியே தலைவன் புகழை நேரே சொல் வது ஒரு வகை. அவனோடு சேர்ந்த பொருள்களைச் சிறப்பித்து அவனைப் புகழ்வது ஒரு வகை. இரண்டும் தலைவன் புகழைச் சொன்னவையே ஆகும். மயிற் பாட்டு அருணகிரியார் முருகப்பெருமானுடைய மயிலையும், வேலையும், சேவலையும் பல இடங்களில் பாராட்டியிருக்கிறார். திருவகுப்பு என்னும் நூலில் வேலையும் மயிலையும் தனித்தனி வகுப்புகளால் பராட்டுகிறார். கந்தர் அலங்காரத்தில் மயிலைப் பாராட்டிய சில பாடல்களை முன்பு நாம் பார்த்திருக்கிறோம். இப்போது வேறு ஒரு மயில் பாட்டைப் பார்க்கலாம். இந்தப் பாட்டு மயிலையே முன்னிலைப்படுத்திப் பாடுவது. 'மயிலே, உன்னுடைய மனம் போனபடி உன்னை விட்டுவிட்டால் 27O