பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் நீ இப்படி எல்லாம் செய்வாயே!” என்று பாராட்டும் முறையில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. கொற்ற வேள் மயில் எடுத்தவுடன், தடக் கொற்ற வேள் மயிலே! என்று அழைக்கிறார். முருகப்பெருமானுக்கு உகந்த வாகனமாகிய மயில் அது. அப்பெருமான் எப்போதும் வெற்றியோடு இருப்ப வன். அவன் வெற்றி விரிந்தது; விசாலமானது. தடக் கொற்றம் அது. அந்த வெற்றியில் அவனோடு சேர்ந்தவர்களுக் கும் பங்கு உண்டு. போரில் தலைசிறந்து நின்ற பகைவர்களை அழித்த முருகப்பெருமான் மயில் வாகனத்தின் மேலேறிச் சென்று அந்தக் காரியத்தைச் செய்தான். அப்போது பகைவர் அஞ்சநடைபோட்டுச் சென்ற ஆற்றலுடையது அந்த மயில். தாவடியோட்டும் மயில்’ என்று அந்த நிலையைத்தான் குறிப்பிட்டார். ஆகவே ஆண்டவன் பெற்ற வெற்றியில் மயிலுக்கும் பங்கு உண்டு. இதை நினைத்து, “தடக்கொற்ற வேள் மயிலே' என்றார். விரிந்த கொற்றம் வேளுக்கும் உரியது; ஓரளவு மயிலுக்கும் உரியது. ஆதலின், தடக்கொற்ற வேள் என்று முருகனுக்கு அடையாகவும், தடக் கொற்ற மயில் என்று மயிலுக்கு அடையாகவும் இரண்டு வகையிலும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். - மயில் அழகியது. பார்த்தவர்கள் கண்ணைப் பறிக்கும் பேரழகு பெற்ற பறவை அது. அதற்கு இயற்கையாகவே ஒரு கவர்ச்சி இருக்கிறது. முருகப்பெருமானுடைய சம்பந்தத்தால் அதனுடைய பெருமை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. சேவல் தொல்காப்பியத்தில் ஒரு சூத்திரம் வருகிறது. அது பறவை களின் பெயர்களை வரையறுத்துச் சொல்வது. 'சிறகுடைய பட்சிகளில் ஆண்களுக்கு எல்லாம் சேவல் என்னும் பெயர் பொருந்தும். ஆனால் மயில் அல்லாத மற்றப் பறவைகளுக்குத் தான் அந்தப் பெயர் உரியது' என்று அச்சூத்திரம் சொல்கிறது. “சேவற் பெயர்க்கொடை சிறகொடும் சிவனும் மாயிருந் தூவி மயிலலங் கடையே' 271