பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் களை எல்லாம் கணக்கு எடுத்துப் பார்க்க முடியாது. விஞ்ஞானி தள் மிக நுட்பமான தொலைநோக்கிக் கண்ணாடிகளைக் கொண்டு பல நட்சத்திரங்களைக் கண்டுபிடித் திருக்கிறார்கள். ஆனால் அவற்றோடு நட்சத்திரக் கணக்குத் தீர்ந்தது என்று அவர்கள் சொல்வதில்லை. 'இன்னும் இந்தக் கூட்டங்களைப் போல எத்தனை எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் இப்போது காண முடியவில்லை' என்று சொல்கிறார் கள். அறிந்ததைவிட அறியாதன அதிகம் என்பது உண்மையான அறிவாளிக்குப் புலனாகிறது. அந்த வகையில் இன்று பல நட்சத் திரங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இன்னும் நுட்பமான கருவிகளை உண்டாக்க உண்டாக்க, இன்னும் பல நட்சத்திரங் களைக் காணும் வாய்ப்பு இருக்கிறது. என்றே சொல்கிறார்கள். பூமி உருண்டையாக இருக்கிறது; எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கிறது. இதைச் சுற்றி நெடுந்துரம் வரைக்கும் இதன் ஆகர்ஷண சக்தி உள்ளது. இப்படியே ஒவ்வொரு கிரகமும் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஆகர்ஷண சக்தியோடு சுழன்று கொண்டிருக்கிறது. ஒன்றன் ஆகர்ஷண சக்தியின் எல்லையைக் கடந்தால் வேறு ஒன்றன் ஆகர்ஷண சக்தியில் அகப்படுவோம். இப்படி அமைந்திருக்கிற கிரகங்கள் எல்லாம் ஒரு பெரிய வெளியில் சுழலுகின்றன. எந்தக் கிரகத்தின் ஆகர்ஷண சக்தியும் இல்லாத ஒரு பெருவெளி உண்டு. அந்தப் பெருவெளியும் இந்தக் கிரகங்களைச் சுற்றி வட்டமாக இருக்கும். அதனை உலகப்புறச் சக்கரவாளம் என்று சொல்வார்கள். புராணம் அப்படி ஒரு மலை இருப்பது போலச் சொல்கிறது. எல்லாக் கிரகங்களுக்கும் அப்பாலே உள்ள வெளிவட்டம் எதுவோ அதுவே சக்கரவாளம் என்று கொள்ளலாம். மேருவைத் தாண்டிச் சென்ற மயில் கடலையும் தாண்டிச் சென்று, பிறகு கதிரவனையும் தாண்டிச் சென்றது. அப்பால் எல்லாக் கோளங்களுக்கும் சுற்று எல்லையாக உள்ள ஈர்ப்புச் சக்தியற்ற புறவெளியாகிய சக்கரவாளத்தை அடைந்தது. அதோடு நின்றதா? அதற்கு மேலேயும் அது போயிற்றாம். வடக்கில் கிரிக்கு அப்புறத்தும் நின் தோகையின் வட்டமிட்டுக் கடற்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத் திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே. 275