பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திசைக்கு அப்புறம் எல்லைகள் இரண்டு வகைப்படும்; இட எல்லை, கால எல்லை என்று. இடத்திற்குக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு வேறுபாடுகள் உண்டு. இடம் உள்ள மட்டும் இந்தத் திசையின் பாகுபாடும் உண்டு. பூமியின் எல்லையைக் கடந்து, ஆகர்ஷண சக்தி கொண்ட பல கோளங்களின் எல்லை களையும் கடந்து புறவெளி மட்டும் சென்ற மயில் அந்த எல்லை யையும் கடந்து விடுகிறதாம். திசை என்ற வரையறை கொண்ட இடத்தையும் தாண்டிச் சென்றுவிடுகிறது. திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே. இடம் கடந்த இடம் இப்படிச் சிறிய எல்லைகளை எல்லாம் கடந்து, பிறகு பெரிய எல்லைகளையும் கடந்து எல்லையிறந்த ஓரிடத்தில் நிற்கிறது. கோயிலுக்குள்ளிருந்து ஒருவன் வெளியில் வந்து, முதல் பிரா காரத்தைத் தாண்டி, இரண்டாம் பிராகாரத்தையும் தாண்டி, ஏழு திரு மதில்களையும் தாண்டி, கடைசியில் வெளியில் வந்துவிடு வதுபோல இந்த மயில் செய்கிறது. அதாவது இடம் கடந்த எல்லையில் அது திரிகிறதாம். தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடின் நீ வடக்கில் கிரிக்குஅப் புறத்தும்நின் தோகையின் வட்டமிட்டுக் கடற்குஅப் புறத்தும், கதிர்க்குஅப் புறத்தும் கனகசக்ரத் திடர்க்குஅப் புறத்தும், திசைக்குஅப் புறத்தும் திரிகுவையே. இப்படி அலங்காரமாக மயில் செய்வதை ஓர் ஓவியம் போலக் காட்டினார் அருணகிரிநாதர். இவ்வாறு கற்பித்துச் சொல்வதில் என்ன நயம் என்ற கேள்வி எழலாம். மயிலின் பெருமையைச் சொன்னதாக இந்தப் பாட்டு இருந்தாலும், இறைவனுடைய தொடர்பு உடையவர்களுக்கு எத்தனை ஆற்றல் உண்டாகும் என்பதை இது உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது. இருவகை எல்லை மயில் ஆண்டவனுக்கு வாகனமாக அவனோடு ஒட்டி நிற்பது. இறைவன் கால எல்லை, இட எல்லையாகிய இரண்டையும் 276