பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும் ஈடுபடுவதுண்டு. ஞானசம்பந்தப் பெருமான் இணை யில்லாத ஞானம் பெற்றவர். அவர் தல தரிசனம் செய்தார்; அது சரியை. “ஞானம் கை வந்தவருக்கு இது எதற்கு என்று கேட்கலாமா? அவர் பூசை செய்தார். சில நேரம் நிட்டையில் இருந்தார். ஆதலின் நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். சிவஞான சித்தியார் இந்த உண்மையைச் சொல்கிறது: "ஞானயோ கக்கிரியா சரியை நாலும் நாதன்தன் பணிஞானி நாலினுக்கும் உரியன்; ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் யோகி;கிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி ஆணஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன் அச்சரியைக் கேஉரியன்.' ஆதலின் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடு தலும் பாடுதலுமாகியவற்றை இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனா மலம் தாக்கா மல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். "செங்கமலத் தாளிணைகள் சேரல் ஒட்டாத் திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடும் செறிந்திட் டங்கவர்தம் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி எங்குமியாம் ஒருவர்க்கும் எளியோ மல்லோம், யாவர்க்கும் மேலானோம், என்றிறுமாப் பெய்தித் திங்கள்முடி யார்.அடியார் அடியோ மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே' என்பது சிவஞான சித்தியார். 2 பூசை மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய திருவுருவைத் தானே பூசிப்பது அது. 15