பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களுக்கு அவன் ஒலை அனுப்புவான். முன்பு பலவிடங்களில் அவன் செய்த அட்டகாசத்தைக் கேட்ட புலவர்கள் அவனது ஒலை வந்தவுடனேயே, 'பிரதிவாதி பயங்கரனுக்கு அடிமை என்று முறி எழுதிக் கொடுத்துவிடுவார்கள். இப்படிப் பலர் அவனுக்கு அடிமையானதனால் அவன் கர்வம் மிக்கது. பாண்டி நாட்டை விட்டுச் சோழ நாட்டுக்கு வந்தான். அங்கங்கே இந்த மிண்டனோடு நமக்கு வாக்குவாதம் எதற்கு என்று சில புலவர்கள் அடிமை என்று எழுதிக் கொடுத்தார்கள். வேறு சிலர் எதிரிட்டுச் சொற்போர் புரிந்து தோல்வியுற்றனர். இப்படிச் சோழ நாட்டை ஒரு கலக்குக் கலக்கி விட்டுக் கொங்குநாட்டுக்கு வந்தான். திருச்செங் கோட்டுக்கு அருகில் வரும்போது அந்த ஊரில் குணசீலர் என்னும் புலவர் இருக்கிறார் என்று உணர்ந்தான். அவர் பெருமை அவனுக்குத் தெரியாது. எல்லோரையும் போல அவருக்கும் வழக்கமாக ஒலையை அனுப்பி வைத்தான். பிரதிவாதி பயங்கரனது ஒலையைப் பார்த்தவுடன் குண சீலருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. இறைவன் துணையன்றி வேறு யார் துணையும் இல்லையென்ற உறுதியான எண்ண முடையவர் அவர். ஆகவே, திருச்செங்கோட்டு வேலனிடம் சென்று, "எம்பெருமானே! நான் ஒரு பாவமும் அறியேன். ஏதோ ஒரளவு தமிழைக் கற்று, நான் கற்ற கல்வியை உனக்குத்தான் அர்ப்பணித்து வருகிறேன். நான் புலமை உடையவன் என்றோ, பிறரோடு போரிட்டு வெற்றி பெறுவேன் என்றோ ஒருநாளும் நினைத்தது இல்லையே! இப்படி இருக்க, என்னிடம் வம்புச் சண்டைக்கு ஒரு புலவன் வருகிறானே. நான் என்ன செய்வேன் உன்னுடைய திருவருள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று மனமுருகி விண்ணப்பம் செய்து கொண்டார். தமக்கு வந்த ஒலையை ஆண்டவனுடைய திருவடியில் வைத்துவிட்டுத் தம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். குணசீலரிடமிருந்து பிரதிவாதி பயங்கரனுக்கு விடை ஒன்றும் வரவில்லை. அதனால் கோபமுற்ற அந்தப் புலவன் அவரோடு வாதிட்டு அவரைத் தோல்வியுறச் செய்ய வேண்டுமென்று எண்ணித் திருச்செங்கோட்டை நோக்கி வந்தான். சிவிகையில் 282