பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 விரித்து ஆடினால் முருகப் பெருமானுடைய வாகனமாகிய மயில் கொத்துமே என்று அஞ்சி, ஆடாமல் அசையாமல் ஆதிசேடன் திருச்செங்கோடு என்னும் மலையாகப் படுத்துக்கிடக்கிறான் என்று சமத்காரமாக மேலே சொன்ன பாட்டுத் தெரிவிக்கிறது. அருணகிரிநாதர் ஒரு புதிய கற்பனை செய்கிறார். இது கந்தபுராணத்தில் இல்லாதது. திருச்செங்கோட்டுப் புராணத்திலும் இல்லாதது. அதை இப்போது பார்க்கலாம். ஆதிசேடன் கர்வம் முருகப்பெருமான் தன்னுடைய மயில் வாகனத்தில் ஏறிக் கொண்டு உலா வந்தான். தன் மாமனாரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று திருவைகுந்தத்திற்கு எழுந்தருளினான். அப்போதுதான் திருமால் தம்முடைய மெத்தென்ற பாம்புப் படுக்கையின்மேல் படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். ஆதிசேடன் தன் படங்களை விரித்துக் கொண்டு அந்தப் பெருமானுக்குக் குடை போல இருந்தான். அப்போது அவன் கண்களில் முருகப்பெருமான் வாகனமாகிய மயில் தென்பட்டது. பொதுவாகத் தன்னுடைய இனத்தினர் மயிலுக்கு அஞ்சித் துன்புறுவதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். இப்போது இந்த மயில் நம்மை என்ன செய்யும்?' என்ற கர்வம் அவனுக்கு உண்டாயிற்று. நாம் திரு மாலினுடைய படுக்கையாக இருக்கிறோம். அந்தப் பெருமானுடைய சங்கும் சக்கரமும் நமக்குக் காவலாக இருக்கின்றன. இப்போது இது நம்மை என்ன செய்துவிடும்?' என்று அவன் நினைத்தான். உடனே ஆயிரம் படங்களையும் நன்றாக விரித்து அடித்துக் கொண்டு, 'மயிலே, மயிலே செளக்கியமா? என்று கேட்டான். பின்பு சிறிதே ஏளனமாகச் சிரித்தான். மயிலின் கோபம் மயில் ஒரு கணம் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தது. ஆதிசேடனுடைய உள்ளத்தில் ஒடுகின்ற செருக்கை அதனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நம்மைக் கண்டு காத தூரம் ஒட வேண்டிய இவன் இங்கே திருமால் தன் மேலே படுத்துக் கொண்டிருப்பதனால் அல்லவா இத்தகைய கர்வத்தை அடைந் திருக்கிறான்? திருமால் நம் பெருமானைக் காண்பதற்கு வரும் 286