பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 "என்ன என்ன காரணங்களினால் அதை முருகன் தலம் என்று சொல்கிறார்கள்?" என்று அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான் பல ஆதாரங்களைச் சொல்லி, "வட நாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன்தான். வெள்ளிக்கிழமையன்று வில்வ அர்ச்சனை நடக் கிறது. மலைகளுக்கு எல்லாம் முருகன் தலைவன் என்பது ஒரு வழக்கு' என்று நான் சொல்லிக் கொண்டு வந்தேன். பிறகு அவர்கள், 'உன்னுடைய கருத்து என்ன?’ என்று கேட்டார்கள். 'பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இரண்டும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயி லுக்குச் சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண் டும் என்று நினைக்கிறேன்' என்றேன். உடனே அவர்கள் ஒரு நுட்பமான கருத்தைச் சொன்னார்கள். 'ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். கெளமாரி, வைஷ்ணவி ஆகிய இரண்டு சக்திகளும் அங்கே இருப்பதாக அந்த நூல் சொல்கிறது. நீ திருப்பதி போயிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் அங்கே போகாத காலம் அது. ஆகையால், 'இல்லை' என்று சொன் னேன். 'போனால் அந்தக் கோயில் மதில் சுவரைப் பார். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். திருமால் கோயிலாக இருந்தால் கருட வாகனம் இருக்க வேண்டும். ஆனால் அங்கே என்ன இருக்கிறது தெரியுமா? சிங்க வாகனத்தைத்தான் காணலாம். அது சக்தியின் வாகனம். தொண்டை நாட்டிலும், அதற்கு வடக்கிலும் அம்பிகை கோயிலின் முன் வாகனமாகச் சிங்கத்தைத்தான் பார்க்கலாம். சோழ தேசத்தில் ரிஷபம் இருந் தாலும் தொண்டை நாட்டில் சிங்கத்தை வைத்திருப்பார்கள். தொண்டை நாட்டுக்கு வடக்கே யுள்ள திருப்பதியில் சிங்கம் திரு மதிலில் இருப்பதைக் கொண்டு, அது சக்தி rேத்திரம் என்பது விளங்குகிறது அல்லவா? இரண்டு சக்திகள் இருப்பதனால் முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்கிறார்கள்' என்று அருளினார்கள். பிறகு அங்கே இருந்த ஒருவரிடம், "எனக்குத் திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா" என்று பணித்தார்கள். அதை அவர் கொண்டு வந்து கொடுத்தார். 283