பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு அதை என்னிடம் கொடுத்து, 'அளந்து பார்' என்றார்கள். திருப்பதியை அதுவரைக்கும் பாராதிருந்த எனக்குத் திருவேங்கட வனுடைய திருமேனியில் அணிந்த பரிவட்டம் என் கையில் பட்டவுடன் புளகாங்கிதம் உண்டாயிற்று. என் கையால் அதனை அளந்து முழம் போட்டேன். சரியாக முப்பத்தாறு முழம் இருந்தது. 'திருப்பதிப் பெருமாளுக்குத் தனியாகத் தறி போட்டு ஆடை நெய்வது வழக்கம். அதற்கென்று தனியே ஒரு கிராமம் இருக்கிறது. முப்பத்தாறு முழம் உள்ள பரிவட்டந்தான் பெரு மாளுக்கு அணிகிறார்கள். முப்பத்தாறு முழம் என்பதில் ஏதாவது உனக்குத் தோன்றுகிறதா?’ என்று ரீ ஆசாரியாரவர்கள் கேட் டார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவர்கள், 'பொதுவாக நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். ஒரு பெண்ணுக்குப் பதினெட்டு முழம் என்றால் இரண்டு பெண்களுக்கு முப்பத்தாறு முழம் அல்லவா? இரண்டு சக்திகள் சேர்ந்த மூர்த்தி முப்பத்தாறு முழம் கட்டுவது பொருத்தந்தானே?' என்றார்கள். இது சமத்காரமாகச் சொன்ன வார்த்தை. ஆனாலும் இரண்டு சக்திகள் சேர்ந்த மூர்த்தி அங்கே திருக்கோயில் கொண்டிருப்பதை அன்று அவர்கள் வாயிலாக உணர்ந்தேன். அதற்க ஆதரமாகத் திருவேங்கடம் கோயில் மதிலி லுள்ள வாகனம் சிங்கம் என்பதை மனத்தில் பதித்துக கொண்டேன். வாகன அடையாளம் lொகனத்தைக் கோயிலுக்கு அடையாளமாக வைப்பது வழக்கம் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை இப்போது சொன் னேன். சிவன் கோயில் என்றால் திருமதிலின் மேல் ரிஷபம் இருக்கும். பிள்ளையார் கோயில் என்றால் மூஷிகம் இருக்கும். திருமால் கோயில் என்றால் திருமதிலின் மேல் கருடாழ்வார் இருப்பார். முருகன் கோயில் மதில்மேல் மயில் இருக்கும். ஒரே ஒர் ஊரில் மாத்திரம் இந்த அடையாளத்தைக் காண முடியாது. திருவாவடுதுறையிலுள்ள கோயிலின் மதில் மேலே இடபங் களைக் காண முடியாது. முன்பு இருந்தனவாம். திருமாளிகைத் தேவர் என்ற சித்தர் அந்த ரிஷபங்களுக்கு உயிர் உண்டாக்கிப் பகைவரிடம் போரிட அனுப்பி விட்டாராம். அந்த ஊர்த் திருமதில்மேல்தான் ரிஷபங்களைக் காண முடியாது. 289