பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மயிலின் சிறப்பு எம்பெருமானை யாவரும் காணத் தன்மேலே ஏற்றித் கொண்டு வருகிற வாகனம் மயில். 'நீலங்கொள மேகத்தின் மயின்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதை' என்று அருணகிரியார் திருப்புகழில் பாடுவார். எம்பெருமான் திருக்கோயிலில் இருந்தபடியே இருந்தால் பலர் அவனுடைய காட்சியைப் பெறுவதில்லை. ஆனால் நையாத மனத்தினரையும் நையும்படியாகச் செய்ய ஆண்டவன் மயில்வாகன மூர்த்தியாக எழுந்தருளுகிறான். அதனால் வீதியிலுள்ள மக்கள் அவன் தரிசனத்தைப் பெற்று இன்புறுகிறார்கள். முருகப் பெருமான் எந்தச் சமயத்திலும் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக நீல மயில் மேல் ஏறி வருகிறான். 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்' என்று அலங்காரத்தில் முன்பு வந்ததை நாம் கண்டோம். மயில் பிரணவத்தின் சொரூபம் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். அத்தகைய மயிலின் பெருமையை ஆதிசேடன் எண்ணிப் பார்க்க வில்லை. தான் மிக்க உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணித் தன் வைரியான மயிலுக்குத் தன் மிடுக்கைக் காட்ட வேண்டு மென்று தோன்றியது போலும்! மயிலின் செயல் LDTப்பிள்ளைக்கு எவ்வளவு வயசானாலும் மாமனார் அவனுக்கு மரியாதை செய்ய வேண்டும். 'மாப்பிள்ளையிலும் எருமையிலும் கிழம் இல்லை என்ற ஒரு பழமொழி வழங்கு கிறது. மாப்பிள்ளை வீட்டாரிடத்தில் மாமனார் வீட்டார்கள் மரியாதையோடு நடந்துகொள்ளாவிட்டால் கோபதாபங்கள் உண் டாகிவிடும். இங்கே மாப்பிள்ளைப் பெருமானாகிய முருகன் வரும்போது அவன் வாகனத்தை ஆதிசேடன் அலட்சியம் செய்து விட்டான். திருமால் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினார். தலைவர் கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் உடன் இருக்கும் 29C