பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சொல்லலாம். அருணகிரியார் சேல் மீன்கள் திகழும் வயல் என்று வருணிக்கிறார். வயல்களில் நீர் நிரம்பினால் சேல் மீன்கு உலவும். சேல்கள் திகழும் என்றதனால் அங்குள்ள நீர்வளத்துை புலப்படுத்தினார். அதோடு மக்களுடைய நீர்மை வளமும் புலனாகிறது. அந்த மீன்கள் அவர்கள் வயிற்றில் போகாமல் குழந்தைகளைப் போல வயல்களில் துள்ளுகின்றன. இப்படிச் சொல்வது அருணகிரியாருடைய வழக்கம். 'சேல்பட்டு அழிந்தது. செந்தூர் வயற்பொழில்’ என்ற பாட்டில் அதனைப் பற்றி விரிவாக நாம் பார்த்தோம். திருச்செங்கோட்டைச் சொல்லும்போது, 'சேலார் வயற்பொழில்’ என்று சொல்லியிருப்பதையும் பார்த்தோம். இவற்றையெல்லாம் ஒப்ப, சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் என்று இங்கே சொன்னார். அங்கே மலை வளமும் உண்டு; வயல் வளமும் உண்டு; சேடன் பட்ட பாடு முருகனுடைய மயிலைச் செழுங்கலபி என்று சொல்கிறார். செழுமையான கலாபத்தையுடையது என்று பொருள். கலாபத்தை யுடையது கலாபி. அது இங்கே செய்யுள் ஒசையை நோக்கிக் கலபி என்று ஆயிற்று. அது ஆரவாரித்து அனந்தனுடைய பணா முடியைத் தாக்கியதாம். ஆலித்து அனந்தன் பணாமுடி தாக்க. அதனுடைய விளைவு என்ன என்பதைப் பின் இரண்டு அடிகளால் சொல்கிறார். -* *y → அதிர்ந்துஅதிர்த்து காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ரா யுதமும் பணிலமுமே. அதிர்ந்து அதிர்ந்து மாணிக்க ராசிகளை எல்லாம் கக்கி விட்டான் ஆதிசேடன். அந்த மாணிக்கக் குவியல் மயிலின் காலடியில் விழுந்து கிடந்தது. 292