பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு காலில் கிடப்பன மாணிக்க ராசியும். ஆண்டவனது காலில் விழவில்லை. மயிலின் காலில் அருச்சனை செய்த மாதிரி அவை கிடக்கின்றனவாம். ஆயிரம் மணிகள் மயிலின் காலில் கிடக்கின்றன. ஆயிரம் செம்மலரால் அருச்சனை செய்ததுபோல அது தோன்றும் அல்லவா? ராசி என்பது கூட்டம் என்னும் பொருளுடையது. ஆண்டவனுடைய வாகனமாகிய மயில் தன் தோகையை அடித்து ஆரவாரித்து ஆதிசேடன் பணா முடியைத் தாக்கியதனால் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஆதிசேடன் உடம்பை அடித்திருக்கலாம். அகங்கரித்து நிமிர்ந்தது பணாமுடி தானே? ஆகையால் அங்கே தாக்கியது. ஆதிசேடனை அழித்து விடாமல் இந்த அளவில் மயில் நிறுத்தியது. தலை நிமிர்ந்திருந்த ஆதிசேடன் மணிகளைக் கக்கிவிட்டுத் தலை பணிந்து புரண்டு விழுந்தான். பாம்புக்கு நஞ்சும் உண்டு, மாணிக்கமும் உண்டு. நஞ்சு இருக்கிறதென்று எண்ணினால் அது தன் தலையை நிமிர்த்தி வைத்துக்கொள்வதற்குக் காரணம் இல்லை. மாணிக்கம் இருக் கிறது என்ற செருக்கினால் அது தலை நிமிர்ந்து இருந்தது. அந்தச் செருக்குக்குக் காரணமான மாணிக்கத்தை இப்போது தகர்த்துக் கீழே விழச் செய்துவிட்டது மயில். ஆயிரம் மாணிக்கங்களும் உதிர்ந்து ஆதிசேடன் வெறும் பாம்பு போலக் கிடந்தான். சார்பினால் வந்த தீங்கு அது மாத்திரமா? ஆதிசேடன் தவறு செய்தான். அதனால் தண்டனை பெற்றான். ஒரு தவறும் செய்யாத திருமாலும் ஏன் கீழே விழுந்தார்? நல்லவர்கள் பொல்லாதவர்களுடன் சேர்ந்தால் அவர்களுக்கும் துன்பம் உண்டாகும். அதுமாதிரி இங்கே காசினியைப் பாலிக்கும் மாயனாரும் கீழே விழுந்தார். அவர் கையிலுள்ள சங்க சக்கரங்களும் கீழே விழுந்தனவாம். எறிபத்த நாயனார் என்னும் அடியவர் ஒருவர் இருந்தார். சிவகாமி ஆண்டார் என்பவர் கையில் இருந்த ஒரு மாலையை மன்னனுடைய யானை பறித்துக் காலின் கீழே போட்டுத் துகைத்துவிட்டது. அதைக் கண்ட நாயனார் அதன் துதிக்கையை வெட்டினாராம். பின்பு அதன் மேலே இருந்த பாகனையும் க.சொ.Wi-19 2.93