பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வெட்டினாராம். யானை தவறு செய்திருந்தாலும் அதனைச் சார்ந்ததனால் பாகனுக்கும் தண்டனை கிடைத்தது. பெரிய காட்டுக்கு நடுவில் சந்தன மரம் இருந்தால் அந்தக் காட்டிலுள்ள முள் மரங்களுக்குக் கொள்ளி வைத்துச் சுடும்போது அவற்றோடு சேர்ந்து நடுவிலுள்ள சந்தன மரமும் எரிந்துதான் போகும். அதுபோல, சிற்றினத்தைச் சேர்ந்தால் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் தீங்கே அடைவார்கள் என்பதை இந்தப் பாட்டுப் புலப்படுத்துகிறது. இங்கே மற்றொரு சிறப்பு : மாணிக்க ராசியும் மாயனும் சக்ராயுதமும் பணிலமும் கிடந்தன என்று சொன்னார். கிடந்தன என்பது அஃறிணை. மாணிக்கக் கூட்டம் அஃறிணை. சங்கம் அஃறிணை. மாயனோ உயர்திணை. மயிலின் காலில் விழுந்து கிடக்கும்போது உணர்வற்ற அஃறிணை போலக் கிடந்தாராம். அதனால் அஃறிணைகளோடு சேர்த்துச் சொல்லிவிட்டார். இது ஒரு வகையாகக் கற்பனை பண்ணிய காட்சி. திருமாலை இழித்துச் சொல்ல வேண்டுமென்பது அருணகிரியாரின் நோக்கம் அல்ல. தான் கெட்டதல்லாமல் தன்பால் உறங்கிய பெருமாளுக் கும் தீங்கு உண்டாகும்படி செய்தான் என்றதனால், ஆதிசேட் னுடைய அபசாரத்தின் மிகுதியைப் புலப்படுத்தினார். 'மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு முருகன் வைகுண்டத் திற்குப் போனானாம். திருமால் ஆதிசேடன் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மயில் மீது தான் கொண்ட பகையின் காரண மாகச் சற்றே பராமுகத்தோடு நிமிர்ந்து பார்த்து, தன்னிடம் உள்ள மாணிக்கத்தை எண்ணிச் செருக்கிய ஆதிசேடன் மயிலைக் கண்டு ஏளனம் செய்தானாம். மயில் சினந்து தன் தோகையை அடித்துக் கொண்டு ஆதிசேடனுடைய படங்களோடு கூடிய முடியைத் தாக்கி மோத, அவற்றிலுள்ள மாணிக்கங்கள் சிதறி மயிலின் காலில் விழுந்து குவிந்தனவாம். இவற்றோடு திருமாலும் விழுந் தாராம். சங்கமும் சக்கரமும் விழுந்தனவாம்’ என்று ஒரு காட்சியைக் கற்பனைசெய்து அருணகிரியார் வருணிக்கிறார். இப்படி எந்தப் புராணத்தில் வருகிறதென்ற கேள்வி எழலாம். இது எந்தப் புராணத்திலும் இல்லை. கந்தன் பெருமையைப் பல வகையான கற்பனைகளை அமைத்து அலங்காரமாகச் சொல்லிக் 294