பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் வைத்தார், ஆசிரியர் பரஞ்சோதி முனிவர். முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 'போதஆனந்தத் தனிக்கடல் பருகும் புயல்புரை முனிவனை வசிட்ட மாதவன் ஆதி முனிவரும் உலோபா முத்திரை தன்னொடும் வரித்துப் போதொடு சாந்தம் மான்மதம் தீபம் புகைமுதற் கருவிகைக் கொண்டு மேதகு சிறப்பால் அருச்சனை செய்து பின்னும்ஒர் வினாவுரை செய்வார்!” என்று பாடுகிறார் பரஞ்சோதியார். இங்கே முனிவர் பூசை செய்ததையே, அருச்சனை செய்து' என்று சொன்னார். மனிதனை அவனுக்குச் சிறப்பான அங்கமாகிய தலையைச் சுட்டி, "தலைக்கு ஒரு பணம் கொடு' என்று ஆகு பெயர் வகையில் சொல்வது போலவும், சோற்றோடு கறி முதலி யன உண்டாலும் தலைமையான சோற்றைச் சுட்டி, 'சோறு தின்றான்' என்று உபலட்சண வகையில் சொல்வது போலவும் பூசையில் சிறந்த அங்கமாகிய அருச்சனையால் பூசையையே குறிக்கும் மரபு அமைந்தது என்பதை இவற்றால் உணரலாம். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதாற் சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டா கலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் பெயர்

  • போதஆனந்தம் ஞானானந்தம். புயல்புரை - மேகத்தை ஒத்த, முனிவனை - அகத்தியனை. உலோபா முத்திரை: அகத்தியர் மனைவி, வரித்து - பூசைக்குரியவர்களாக அமைத்து. போது - மலர். மான்மதம் - கத்துரி

18