பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் அதுபோல் வாழ்வில் நாளுக்கு நாள் அநுபவமும், பொருள் களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்றுப் பிறந்த அநுபவம் இன்று போய்விடுகிறது. புதியதாக அநுபவம் வருகிறது. கண நேரத்திற்கு முன்னால் தோற்றிய எண்ணம் அடுத்தகணம் நிலைத்து நிற்பது இல்லை. இப்போது புதிய எண்ணம் வந்துவிடுகிறது. நமது சிந்தனையும் கற்பனையும், விருப்பும் வெறுப்பும், இன்ப துன்பங்களும், நட்பும் பகையும், உணவும் உறக்கமும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே போகின்றன. காலத்திற்குக் காலம் புதியனவாக வருகின்றன. கணந்தோறும் நம் வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணத்தைக் கொண்டு பெளத்தர்கள் rணபவ பங்கம் என்ற கருத்தைச் சொன்னார்கள். உலகத்தில் எல்லாப் பொருள்களும் கணத்தில் தோன்றி மாறிவிடுகின்றன. வாழ்வும் அத்தகையதே' என்பதை எண்ணி அவர்கள் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஏரியிலுள்ள தண்ணீர் நிலையாக நிற்பது போல நம் வாழ்வு நிற்பது இல்லை. ஆற்றிலுள்ள தண்ணீர் போய் விடுகிற மாதிரி நம் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாழ்வு ஆற்றுப் படுகை. விதி என்னும் நீர் ஓடுகிறது. அந்த நீரோட்டத்தில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். இரண்டு கரையும் நமக்குத் தெரியவில்லை. ஒரு கரை நல்ல கரை; மற்றொன்று தீய கரை. ஒரு கால் கரை யோரமாகப் போகிற வாய்ப்பு நமக்கு இருந்தாலும் அது தீய கரை யோரமாகப் போகிறதாகவே முடிகிறது. ஒரு கரையில் பூம் பொழில்கள் இருக்கின்றன; மற்றொரு கரையில் முள் புதர்கள் இருக்கின்றன. அந்தப் பூம்பொழிலே சொர்க்கம், நல்ல பிறவிகள்; முள் புதர்களாக இருப்பது தீய பிறவிகளும் நரகமும். இப்போதுள்ள வாழ்வில் நாம் செய்கிற காரியங்கள் மீண்டும் மீண்டும் இந்த வாழ்விலே நம்மை ஆழ்த்திவிடுகின்றன. ஒன்று நாம் கரையில் ஏற வேண்டும்; அல்லது சமுத்திரத்தில் போய்ச் சேர வேண்டும். நல்ல கரையில் சேர்ந்தால் நல்ல பிறப்புக் கிடைக்கும். தீய கரையில் சேர்ந்தால் தீய பிறப்புக் கிடைக்கும், இந்த இரண்டும் இல்லாமல், கரையைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்க வேண்டுமானால் கடலைச் சார வேண்டும். அந்தக் கடல்தான் ஆண்டவன். கடலைப் போய்ச் சேர்ந்தபின் நதிக்கு ஒட்டம் இல்லை; கரையில்லை. 3○i