பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உடம்புப் பொதி நீர் ஒடும் இடந்தான் நதி. மழைபெய்த தண்ணீர் வந்தால் ஆற்றுப்படுகை முழுவதும் பரந்து வெள்ளம் ஒடுகிறது. வெள்ள ஒட்டத்தில் அகப்பட்ட பிரயாணி பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு வருந்துகிறான். அந்த மூட்டையே உடம்பு; பல வகை யான நரம்புக் கட்டுகளால் அமைந்த உடம்பு, வாழ்க்கை என்னும் நதியில் நம்மை ஆழ்த்துகிறது. மிகவும் அருமையான பொருளை மடியில் வைத்துக்கொண்டு நடக்கிறவனுக்குத் தன் உடம்பின்மேல் காயம் பட்டாலும் கவலைப்படமாட்டான். அந்தப் பொருளுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் அவன் அஞ்சு வான். அதுபோல் நாம் நம்முடைய உடம்புக்குத் தீங்கு ஏதாவது நேர்ந்தால் பதறிப்போகிறோம். இதனைப் பாதுகாப்பதில் நம் வாழ்நாளில் பெரும் பாகத்தைச் செலவழிக்கிறோம். அப்படிப் பாதுகாப்பதனால் இது நமக்கு நலம் செய்கிறதா என்றால், இல்லை. நம்மை வாழ்வில் ஆழ்ந்து போகுமாறு இது அமிழ்த்து கிறது. பெரிய மூட்டையாக, பாரம் பொருந்திய மூட்டையாக, இருந்து மீட்டும் மீட்டும் அச்சத்தை உண்டாக்கி இந்திரியங்களின் பசியை ஆற்றுவதற்குரிய செயல் செய்து பிறவியில் ஆழ்த்துகிறது. இவ்வாறு வாழ்கிறோமே, இது நிலையான வாழ்வாக இருக்கிறதா என்றால் இல்லை; இது நிலையற்றது. 'நீரில் எழுத்தாகும் யாக்கை' என்பர் குமர குருபரர். இது பொய் வாழ்வு. நதியிலுள்ள நீர் ஓரிடத்தில் நில்லாமல் ஒடிக்கொண்டிருப்பது போல இந்த வாழ்வு ஒடுகின்றது. நதிதனை அன்ன பொய் வாழ்வில் என்கிறார் அருணகிரியார். வாழ்க்கையில் பற்று நதியில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு அந்த ஆற்றிலே அன்பு இருந்தால் பயன் இல்லை. ஒன்று, கரை சேர வேண்டு மென்ற எண்ணம் இருக்க வேண்டும்; அல்லது கடலைச் சார வேண்டுமென்ற எண்ணம் இருக்க வேண்டும். கடலைப் பற்றிய 3O2