பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உடற்பொறை என்று இதனைச் சொல்வார்கள். உயிருக்குப் பாரமாக இருப்பதனால் உயிர்ப்பாரம் என்றும் சொல்வது உண்டு பரமன் இராமனைப் பிரிந்த ஏக்கத்தினால் இந்த வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான். அவன் தன் உடம்பைப் பெரிய பாரமாகச் சுமந்தான். 'உயிர்ப்பாரம் குறைந்து தேய' என்று சொல்வதாகக் கம்பர் அமைக்கிறார். வாழ்க்கையில் இந்தச் சுமையைச் சுமந்து கொண்டுள்ள மனிதன் மீட்டும் மீட்டும் அந்த வாழ்க்கையில் அன்புடன் போய்த் கொண்டிருக்கிறான். சில சமயங்களில் அதனால் விளைகிற துன்பம் தெரிகிறது, அறிவாளிகளுக்கு. உண்மையான ஞானம் யாருக்குத் தலைப்படுகிறதோ அவர்களுக்கு முதலில் இந்த உடம்பிலே அருவருப்பு உண்டாகும். உயிர்க் கூட்டத்தினிடத்து அருவருப்பு அன்று; உலக வாழ்வில் அருவருப்பு. அருணகிரிநாத சுவாமிகள் அந்த நிலையில் நிற்பவரைப் போலப் பேசுகின்றார். நதிதனை அன்ன பொய் வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட விதிதனை நொந்து நொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே என்கிறார். திண்டாட்டம் இந்தப் பொய் வாழ்வில் உடம்பைச் சுமந்துகொண்டு போவதில் கொண்டாட்டம் இல்லையாம்; திண்டாட்டந்தானாம். பெரும்பாலும் உடம்பைச் சுமந்துகொண்டு பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த உடம்பைப் பெருக்க வேண்டு மென்றும், இதன் கனம் ஏற வேண்டுமென்றும் ஆசைப்பட்டுக் கனம் ஏறிவிட்டால் கொண்டாட்டம் அடைகிறார்கள். அதிக மாகச் சுமையை ஏற்றிக் கொள்வதில் எந்த மாடாவது கொண் டாட்டத்தை அடையுமா? மாட்டுக்குள்ள அறிவுகூட நமக்கு 3O4