பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் இருப்பது இல்லை. கனம் ஏற ஏற நமக்குக் கொண்டாட்டம் மிகுதியாகிறது. ஆனால் பெரியவர்களுக்கு இந்த உடம்பைக் கண்டு திண்டாட்டம் ஏறுகிறது. நரம்பால் பொதிந்த இந்த ஊற்றைச் சரீரத்தை அருவருக்கிறார்கள். பிறர் உடம்பில் நோய் வந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். மற்றவர்களுடைய உடம்பு அசுத்தமாக இருந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். ஆனால் அதே நோயும், அசுத்தமும் நம்மிடத்தில் இருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம். தோல் பளபளவென்று இருப்பதை மாத்திரம் கண்டு ஏமாந்து போகிறோம். சாக்கைத் திருப்பிப் போட்ட மாதிரி உடம்பின் உள்ளே இருப்பதை அறிவினால் திருப்பிப் போட்டு எண்ணிப் பார்த்தால் நம்மால் சகிக்க முடி யாது. அந்த எண்ணம் யாருக்கு வருகிறதோ அவர்களுக்கு இந்த உடம்பினால் கொண்டாட்டம் உண்டாகாது; திண்டாட்டமே உண்டாகும். இத்தகைய திண்.ாட்டம் நமக்கு ஏன் வந்தது? இந்த உலகத்தில் பிறந்ததனால். வாழ்க்கை என்னும் நதியிலே நாம் தத்தளிக்கிறோம். உடம்பாகிய சுமையைச் சுமந்துகொண்டு தத்தளிக்கிறோம். நமக்கு ஒரு புனையில்லை. கரையையும் காண வில்லை. இதிலே வந்து திண்டாடும்படியாக விட்ட காரணம் எது? அதுதான் விதி. - திண்டாடுமாறு எனைப் போதவிட்ட விதிதனை. விதியை நோதல் இந்த வாழ்வில் நாம் முன் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்களை அநுபவிக்கிறோம். இந்த வாழ்க்கை ஒட்டத்தில் நம்மைப் புகுத்திவிட்டது விதி, அல்லது ஊழ். அந்த ஊழ்வினையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவோ சமயங்களில் தலைவிதி என்று நாம் நொந்துகொள்வதில்லையா? நாம் ஏதேனும் துன்பம் அடைந்தால் அப்போதுதான் நொந்து கொள்கிறோம். துன்பம், இன்பம் என்ற இரண்டுமே இந்த உடம் பிலுள்ள ஐந்து இந்திரியங்களின் அநுபவங்கள். அந்த இரண்டை யும் அடைகின்ற இந்திரியங்களும், அவற்றுக்கு இடமாகப் பெரிய சுமையாக இருக்கும் உடம்புமே விதியினால் வந்த விளைவு. இந்த உடம்பே இல்லாவிட்டால் துன்பமே இல்லை; இன்பமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மூலமாக, இடமாக 3○5