பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இருக்கிற இந்த உடம்பைத் தந்தது விதி. அதைத்தான் நொந்து கொள்ள வேண்டும். விதிதனை நொந்துநொந்து இங்கே என்றன்மனம் வேகின்றதே. வாழ்க்கையில் நாம் பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் இறைவன் திருவருளால் நமக்கு அறிவு என்ற ஒன்று கிடைத் திருக்கிறது. முன்னாலே பட்ட துன்பத்தையும், அதைக் கொண்டு இனி வருகின்ற விளைவினையும் எண்ணிப் பார்க்க நமக்கு அறிவு இருக்கிறது. அந்த அறிவினால் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் முடைய துன்பங்களுக்கு யார் யாரோ காரணம் என்று எண்ணித் தடுமாறுகிறோம்; அது தவறு. யாரையும் நொந்து கொண்டு பயன் இல்லை. புகலிடம் இப்படியே போய்க் கொண்டிருக்கிற வாழ்க்கைக்குப் புகல் இடம் ஒன்று வேண்டும். விதியினால் நதி போன்ற வாழ்வில் நரம்புப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திண்டாடுகிற எனக்குக் கதி ஒன்று வேண்டுமே; எந்தக் கதியினையும் காணவில்லையே! என்று சொல்கிறார் அருணகிரிநாதர். கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன். கதி என்பது புகலிடம். நதியில் போகிற பொருளுக்கு மூன்று கதி உண்டு; இரண்டு கரைகள், முடிவிடம் ஆகியவை. நாம் பிறக்கும் பிறப்பு வகையைக் கதி என்று சொல்வார்கள். நல்ல கதி, கெட்ட கதி ஆகிய இரண்டும் கரைகள்; நல்ல பிறப்பு ஒரு கரை, கெட்ட பிறப்பு ஒரு கரை. இந்த வாழ்வுக்குப் பிறகு ஏதேனும் பிறப்பு எடுத்தால் இதிலும் உயர்ந்ததாக இருக்கலாம்; அல்லது இதிலும் தாழ்ந்ததாக இருக்கலாம். இந்த இரண்டு கரைகளையும் சாராமல் நேரே கடலில் போய்க் கலப்பதும் உண்டு. கடலில் கலந்தால் மீட்டும் திரும்புவது இல்லை. அப்படி இறைவனோடு ஒன்று கலந்த ஆருயிர் மீட்டும் இந்தப் பிறவியில் புகாது. இப்படி மூன்று வகையான கதிகளும் உயிருக்கு உண்டு. பெரும்பாலான உயிர்கள் தாழ்ந்த பிறப்பை அடைகின்றன. சில உயிர்கள் உயர்ந்த பிறப்பை அடைகின்றன. மிகச் சில உயிர்களே 3O6