பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் முடிந்த முடிபாக ஆண்டவனாகிய கருணைக் கடலோடு ஒன்றுபடுகின்றன. கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன்! மூன்று கதியில் மிக உயர்ந்த கதி இறைவனோடு கலக்கிறது. அந்தக் கதி எனக்கு இப்போது தோன்றவில்லையே! என்று புலம்புகிறார். - கந்தா முருகனை விளித்துப் புலம்புகிறார்; 'முருகா, நீ கந்தனாகத் தோன்றினவன் அல்லவா? கங்கையில் வந்த பிறகு, சரவணப் பூம் பொய்கையில் மிதந்து அங்கே திட்டில் பிரிந்து நின்ற திருமேனி ஆறும் ஒன்றாக உமா தேவியால் அணைக்கப் பெற்றுக் கந்தன் என்ற திருநாமத்தை அடைந்தவன் அல்லவா? ஆற்றில் வந்து, பொய்கையில் மிதந்து, மேட்டில் ஏறி உலகத்திற்கு நலம் செய் யும் ஒரு திருமேனியைப் படைத்த நீ, இந்தப் பொய் வாழ்வில் ஒடுகிற ஒட்டத்தைத் தடுத்து என்னையும் நிலையாக நிறுத்த வேண்டும்’ என்கிறார். இந்தக் குறிப்பை வைத்து, கநத என்றார். வேல் முருகா இருட்டில் ஆற்றில் நடக்கிறவன் அல்லவா இந்தப் பிரயாணி? அந்த இருட்டுப் போவதற்கு ஒளி வேண்டும். சூரியன் தோன்றி னால் கரை கண்ணில் படும். அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது இரவில் மிதந்து கொண்டிருக் கிறான். இரவு என்பது அறியாமை. நம் உடம்பு நமக்குச் சுமை; இந்த வாழ்வு நம்முடைய புண்ணிய பாவ வினைகளின் விளை வாக உண்டாக்கியது. இந்த வாழ்வுக்கு அப்பால் பிறப்பற்ற இன்பம் ஒன்று உள்ளது' என்ற எண்ணங்கள் அறிவு உடைய வனுக்குத்தான் தோற்றும். இவற்றை எண்ணாமல் நாம் பெற்ற பொருளைப் பெரிதாக, நிலையுடையது போல, எண்ணச் செய் வது அறியாமை. அறியாமை நீங்கினால் நம் நிலை புலப்படும். துன்பப்படுகிறவனுக்கு, இன்பம் ஒன்று உண்டென்ற எண்ணம் வேண்டும். பின்பு அதை அடையும் முயற்சி வர வேண்டும். 3O7