பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 எல்லாவற்றுக்கும் மூலமாக, நம் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்யும் ஒளி வேண்டும். முருகன் அறியாமையாகிய இருளை நீக்குகின்ற ஞான ஒளியுடையவன். அவன் ஞான பண்டித சாமி. ஞானமே உருவமாக உள்ள வேலைத் தன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். அது அடியார்களது உள்ளத் திலுள்ள அறியாமை இருளைப் போக்கி, நலம் செய்கிறது. ஆகவே இருட்டில் ஆற்றில் சுமையோடு மிதக்கின்ற மனிதன், மேட்டில் விளக்கை வைத்துக் கொண்டிருக்கும் பெரியவரைப் பார்த்து, 'அப்பனே, என்னைக் கரையேற்ற வேண்டும்; ஒளி காட்ட வேண்டும்' என்று சொல்வதைப் போல, கந்த, வேல்முருகா! என்றார். வினையால் அமைந்த வாழ்க்கையில் இறுதியே இல்லாமல் பிரயாணம் செய்யும் ஆருயிர் அறிவு பெற்று, முதலில் உடம்பு பெரும் சுமை என்பதை உணர்கிறது. பின்பு இதற்கு முடிவு ஒன்று வேண்டுமென்ற எண்ணம் கொள்கிறது. தன் துன்பங் களுக்குக் காரணம் அயலார் என்ற எண்ணம் மாறி, விதி என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறது. பின்பு இந்த நதி போய்ச் சங்கமம் ஆகும் இடமாகிய கடல் ஒன்று உண்டென்பதை உணர்ந்து அதனைச் சார்வதற்கு ஆசைப்படுகிறது. இந்த எண்ணங் களை இந்தப் பாட்டுச் சொல்கிறது. ★ கதிதனை ஒன்றையும் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா! நதிதனை அன்னபொய் வாழ்வில்அன் பாய்நரம் பால்பொதிந்த பொதிதனை யும்கொண்டு திண்டாடு மாறுஎனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந்து இங்கேஎன் றன்மனம் வேகின்றதே. (கந்த வேளே, வேலாயுதம் கொண்ட முருகப்பெருமானே, அறி வில்லாத யான் புகலிடம் எதனையும் அறிந்திலனே ஆற்றைப் போன்ற 3O8