பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் நிலையற்ற வாழ்க்கையிலே விருப்பம் உடையவனாய், நரம்பினால் கட்டியிருக்கும் உடம்பாகிய பாரத்தையும் சுமந்து கொண்டு அல்லற்படும் படி என்னைப் போகவிட்ட விதியைப் பலகால் நொந்துகொண்டு இவ்வுலகில் என் மனம் வருந்துகிறதே! இனி யான் என் செய்வேன்! கதி - புகலிடம்: "கதியாய் விதியாய்' என்று அநுபூதியில் வருகிறது. காண்கின்றிலேன்; காணல் - இங்கே அறிதல். கந்தன். பார்வதி தேவி முருகனுடைய உருவங்கள் ஆறையும் ஒன்றாக்கி அணைத்தாள். அப்போது கந்தன் என்னும் திருநாமம் முருகனுக்கு அமைந்தது. “சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்கள்ஓர் ஆறுபன் னிருபுயம் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம்ான் றுடையாள்." "எர். கதகள் உயிரெலாம் ஒடுங்குறும் எல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவும்ஒன் றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்" என்று கந்த புராணம் கூறும். பொதி - சுமை. அன்பு என்பதை வாழ்வுக்கும் ஆக்கலாம்; பொதிக்கும் சார்த்தலாம். திண்டாடுதல் - நிலையின்றி அலைந்து துன்புறுதல். போத - செல்ல. இங்கே - இவ்வுலகில். வேதல் - துன்பத்தால் புழுங்குதல்; அதனால் துன்பத்தைத் தாபம் என்று வடமொழியில் கூறுவர்.) விதியின் விளைவாகிய வாழ்க்கையினின்றும் ஏறி இன்ப வாழ்வை அடைவதற்கு முருகனே புகலிடம் என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 98-ஆவது பாட்டு. க.சொ.V1-20 sos