பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வரக்கூடும் என்றால் அவர் நம்முடைய உயிரோடு ஒட்டியவராக இருக்க வேண்டும். இப்போது நம்முடைய உயிரோடு ஒட்டியது உடல் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த உடலையும் உதைத்து விட்டு உயிர் தனியே போய்விடுகிறது. அப்போது இந்த உடம்பி னால் நமக்குப் பயன் இல்லை. உயிரோடு என்றும் ஒட்டி, அது செல்லும் இடங்களில் எல்லாம் துணையாக நிற்பவர் யாரேனும் உண்டா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். உயிருக்கு உயிராத இருக்கும் இறைவனே அத்தகைய பெரிய துணையாக வருவான். அவன்தான் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும், எல்லா உயிர்களுக்கும், எந்த நிலையிலும் துணையாக நிற்பவன். அவன் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறான். அது போதாது. நாம் அவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். அவனுடைய திருவடி யாருக்குத் துணையாகக் கிடைக்கிறதோ அவர்கள் என்றும் குன்றாத இன்பத்தை அடைவார்கள். ஆதாரமும் ஆதேயமும் வேறு ஒருவரைத் துணையாக எண்ணி வாழ்ந்தால் அவருக்கு வலிமை குறையும்போது அவரால் ஒரு பயனும் இல்லாமல் போய்விடுகிறது. ஆதாரமாக இருக்கிற பொருள் பலம் அற்றுப் போனால் அதன்மேல் இருக்கும் ஆதேயப் பொருளுக்கும் ஆபத்து வந்துவிடும். மாடி மீது பொருள்களை நிரப்பி வைத்திருக்கி றோம். மாடித் தளம் இடிந்துவிட்டால் அந்தப் பொருள்கள் கீழே விழுந்து விடும். உலகத்திலுள்ள எல்லாவகையான துணைகளும் இப்படியே ஒரு காலத்தில் விழுந்துவிடும். ஆகையால் அழியாத் துணை எதுவும் இந்த உலகில் இல்லை. என்றைக்கும் அழியா மல் இருக்கிற சச்சிதானந்த சொரூபியாகிய ஆண்டவன் ஒருவன் தான் ஆருயிர்களுக்கு அழியாத் துணையாக இருக்கிறான். அந்தத் துணையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எல்லாக் காலத்திலும் இடர் இல்லாமல் வாழும் வாழ்வு கிடைக்கும். பக்தர்கள் அத்தகைய துணையைப் பெற வேண்டும் என்ற ஆசை யையே பக்தி என்று சொல்வார்கள். 'உலகத்தில் வேறு யாரும் துணையில்லை; நீ தான் துணை' என்று ஆண்டவனுடைய திருவடியைப் பற்றிக்கொள்கிறவர்கள் யாரோ அவர்களே பக்தர்கள். 312