பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு 'நின் சரணல்லால் சரணில்லை' என்று புகல் அடைந்தார்கள் ஆழ்வார்கள். இந்த எண்ணங்களை மனத்தில் வைத்துக்கொண்டு அருண கிரியார் தம் மனம் வாடிப் பதைப்பது போல ஒரு பாட்டைச் சொல்கிறார். ★ அருணகிரியார் விண்ணப்பம் துணை எதுவும் இல்லாமல் தன்னந் தனியாக நாம் நிற்கிறோம். துணை இல்லை என்று சொல்வதைவிடத் துணை இருப்பதை அறிந்துகொண்டு பற்றிக்கொள்ளவில்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அறிவு இல்லாதவன் என்று சொல்வதைவிட அறிவை வெளிப்படுத்திப் பயன்கொள்ளாதவன் என்று சொல்வது பொருத்தம். எல்லோரிடமும் அறிவு இருக் கிறது. ஆனால் அதை வெளிப்படுத்திப் பயன்கொள்பவர் சிலரே. கல்வி என்பது அந்த அறிவைத் தூண்டித் தீய குணங்களைக் களைந்து நற்குணங்களை மலரச் செய்கிறது. அதுபோலப் பக்தி என்ற உணர்ச்சி இறைவனுடைய அருள் துணையை விளக்க மாக்கி நலம் செய்கிறது. அந்த உணர்ச்சி இல்லாதவர்கள், ஒவ் வொரு துணையாக நம்பி வாழ்ந்து அந்தத் துணைகள் எல்லாம் இறுதியில் பயன் அற்றுப் போக, நான் துணையில்லாமல் நிற்கிறேனே!' என்று வாடுவார்கள். அந்த நிலையில் இருந்து அருணகிரியார் பேசுகிறார். 'எம்பெருமானே, பற்றிக் கொள் வதற்கு எந்தத் துணையும் இல்லாமல் நான் வாடுகிறேன். தாவிப் படர்வதற்குக் கொழுகொம்பில்லாத கொடிபோல என் மனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றது' என்கிறார். தாவிப் படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. கொடியும் பக்தரும் கொடி எப்போதும் படரும் தன்மையுடையது. அதற்கு ஆதாரமாக மண் இருந்தால் மாத்திரம் போதாது. அது வளர்ந்து 3.13