பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று கம்ப ராமாயணம் பாடுகிறது. இறைவன் திருவடி எங்கும் படர்ந்திருக்கிறது. நமக்கும் ஆந்தத் திருவடிக்கும் நெருக்கம் அதிகம். அப்படி நெருங்கிய திருவடியை மறந்து அதனோடு சாராமல் ஒதுங்கி நிற்கிறோம். 'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தாற் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" என்று வள்ளுவர் சொன்னார். தனக்கு ஒப்பு இல்லாத ஆண்ட வனுடைய பாதாரவிந்தங்களைச் சேர்ந்தாலன்றி மனத்திலுள்ள கவலை யாருக்கும் போகாது என்பது பொருள். இங்கே, சேர்வது என்பதற்கு மனத்தில் தியானித்தல் என்று பரிமேலழகர் பொருள் எழுதுவார். ஆண்டவனை நாம் சார்ந்து நிற்பதாவது, நம்முடைய மனத்தில் அவன் திருத்தாளை எண்ணித் தியானம் செய்வது. அது கண்ணுக்குப் புலனாவது அன்று: கருத்துக்குப் புலனாவது. கொழுகொம்பு இலாத தனிக்கொடிபோல். மனத்திற்கு, உயிருக்கு, கொழுகொம்பாக ஆண்டவன் கழல் விளங்குகிறது. அந்தக் கழல் நமக்கு அணிமையாக நின்றாலும் ஞானசொரூபமாக இருந்து பின்பு மோட்ச சாம்ராஜ்யமாக விளங்கும். - 'தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரிகம்’ என்று அலங்காரத்தில் வருகிறது. அங்கே ஆண்டவனுடைய திருவடி ஞான மயமாக இருக்கும் என்று சொல்கிறார். ஞானத் தான் மோட்ச இன்பத்தைப் பெறுவதற்குரிய வழி. எது வழியாக இருக்கிறதோ அதுவே முடிந்த முடிபாக நிற்கிறது. இது ஆண்ட வனுடைய அருளால் விளைகிற ஆச்சரியம். 'பொக்கக் குடிலிற் புகுதா வகை புண்டரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்” என்பதில் பாதமே மோட்சமாக இருக்கும் என்று சொல்கிறார். உலகத்திலுள்ள உயிர்களுக்கு முதலில் தியானிப்பதற்குரிய பொருளாகிச் செந்தாமரை போல விளங்குவது ஆண்டவனுடைய திருத்தாள். அதுவே பிறகு அறியாமையைப் போக்கிப் பொருளின் 316