பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தும் சுற்றிக்கொண்டிருக்கும். புழுதியில் படர்கிற கொடிபோலப் பிரபஞ்சச் சேற்றில் உழன்று திரியும். கொடி நிலத்திலே படர்ந்து வீணாகாமல், கொழுகொம்பின் வழியே ஏறிப் பின்பு பந்தலை அடைந்து அங்கே படர்ந்து பயன் தருவது போல, நம்முடைய மனம் உலகியல் பொருளில் படர்ந்து அதனால் அழுக்கு அடைந்து துன்பத்தையுற்று வெப்பம் பெற்று, தள்ளாடிப் பதைப்பதை விட்டு, ஆண்டவனுடைய திருவடியாகிய கொழுகொம்பைப் பற்றிக்கொண்டு மேலே போக வேண்டும். போய்ப் பேரின்ப மாகிய பந்தரில் படர வேண்டும். அது தோன்றியது நிலமான லும், பயன்தருவது மேல் நிலத்தில். திருக்குறளில் ஒரு பாட்டு வருகிறது. 'உரன்என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து' என்பது அது. இந்த உலகத்தில் ஐந்து பொறிகளாகிய யானையை அறிவாகிய அங்குசத்தால் அடக்கி ஆளுகிற ஞானி வீட்டு உலகத் திற்கு ஒரு வித்துப்போல நிற்கிறான் என்பது அதன் பொருள். இங்கே பரிமேலழகர், 'வீட்டு உலகத்தில் சென்று முளைத்த லினால் வித்து என்று சொன்னார் என்று பொருள் எழுதினார். வித்துப் போடுவது மண்ணில். ஆனால் அதன் விளைவு மேலே தோன்றுகிறது. இந்த உலகத்தில் இருக்கும் போது உலகத்துப் பொருள்களோடு ஒட்டி அழுக்கேறிப் படர்ந்து விடாமல் நம் முடைய எண்ணங்களை உயர்த்திக்கொள்ளப் பழகினால் மெல்ல மெல்ல மனம் நல்ல இடத்தில் படரும். இருப்பது மண்தானே என்று எண்ணி ஏங்கக் கூடாது. தாமரை சேற்றிலே முளைத் தாலும் அதன் மலர் சேற்றைக் கடந்து தண்ணிருக்கு மேலே மலர்கிறது. தண்ணீர் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அதற்கு மேல் தலையை நீட்டி மலரும் தன்மையுடைது தாமரை. 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” என்பது திருக்குறள். அதுபோல் நல்லவர்களுடைய மனம் இந்தப் பூமியிலே, உலக வாழ்விலே, இருந்தாலும் மிகமிக உயர்ந்த இறைவனுடைய திருவடித் துணை பெற்று மேல் நிலையை அடைகின்றது. 'அத்தகைய நிலை எனக்கு வரவில்லையே!” என்று அருணகிரியார் ஏங்குகிறார். 3.18