பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 செந்தாமரைக் கழலாகிய கொழுகொம்பை நாட்டு. சூரனாதிய அசுரனை உன்னுடைய தொடர்பால் பெருமையுடைய மயில் வாகனமாகும்படி செய்த எம்பெருமானே, உன்னுடைய கமல் பாதத்துடன் சேர்த்து, என்னைக் காத்து அருள வேண்டும்" என்று வேண்டுவாரைப் போலப் பாட்டு அமைந்திருக்கிறது. : ★ காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்; தூவிக் குலமயில் வாகன னே,துணை ஏதும்இன்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. (மெல்லிய இறகையும் சிறப்பையும் உடைய மயிலை வாகனமாகச் கொண்ட எம்பெருமானே, இவ்வுலகில் என் இடரை நீக்கி நலம் செய்யும் துணையாக எந்தப் பொருளும் எனக்கு இல்லாமல், தாவிப் பற்றி ஏறிட் படரத் துணையாகிய கொழுகொம்பு இல்லாமல் வாடும் தனிக்கொடியைப் போலப் பாவம் நிறைந்த என் மனம் தளர்ந்து அலைந்து வாட்டமுற்று அஞ்சிக் குலைகிறதே! நீ அடியேன்ை நின்னுடைய செந்நிறமான தாமரையைப் போன்ற திருவடியோடு சேர்த்துக் காத்தருள வேண்டும். காவிக் கமலம் - செந்தாமரை, காவி என்றது அதன் நிறமாகிய செம்மையைக் குறிக்க நின்றது. கழல் - திருவடி ஆகுபெயர். சேர்த்தல் - இடைவிடாது பற்றிக் கொண்டிருக்கும்படி செய்தல். என்னைச் சேர்த்துக் காத்தருளாய். குலம் - மேன்மை. கொழுகொம்பு - கொடிபடர நடும் கொம்பு; கொள் கொம்பு என்றும் கூறுவார்கள். "கொம்பரிலாக் கொடி போல் அலமந்தனன் கோமளமே என்பது திருவாசகம். பாவி என்பது மனத்துக்கு அடை பாவியாகிய மனம்.) உன் திருவடியைப் பற்றும் அன்பை அடியேனுக்கு அருள வேண்டும் என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 99ஆவது பாட்டு. 322