பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை எந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாலும் அதைச் செவ்வனே முடிக்க வேண்டும். முடிவு மனநிறைவைத் தர வேண்டும். இனிய பாட்டுக் கச்சேரி நடக்கிறது. அது இனிது முடிந்ததென்பதற்கு என்ன அடையாளம்? ஏதோ பெரிய ஆனந்த வெள்ளத்தில் அமிழ்ந்தது போன்ற நிறைவு நம் உள்ளத்தில் உண்டாக வேண்டும். சிறந்த காவியம் ஒன்று இருக்கிறது. அதன் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் முக்கியமானவை. எடுப்பும் முடிப்பும் மிகவும் முக்கியமானவை. முடிப்பு என்றும் மனத்தி லிருந்து நீங்காததாக இருக்க வேண்டும். எடுப்பும் முடிப்பும் காவியங்களில் எடுப்பும் முடிப்பும் ஒன்றுபோல இருக்க வேண்டும். எந்தக் கருத்தைக் காவியம் முழுவதும் வற்புறுத்து கிறதோ, அதை ஆரம்பமே குறிப்பாகக் காட்ட வேண்டும்; முடிவில் அது தெள்ளத் தெளியப் புலனாக வேண்டும். சங்கீதக் கச்சேரியில் ஸ்ா-பா-ஸா என்று முதல் நடு முடிவு சுவரங்களைக் கொண்டு சுருதி சேர்ப்பார்கள். ஸா என்ற சுவரத்தில் தொடங்கி அந்தச் சுவரத்தில் முடிப்பார்கள். வேதம் ஓம் என்று தொடங்கி ஒம் என்று முடிகிறது. இப்படி இருப்பது ஒர் அழகு; கலையழகு. கந்தர் அலங்காரத்தின் இறுதிப் பாடலாகிய நூறாவது பாட்டை இப்போது பார்க்கப்போகிறோம். அதுதான் இந்த அற்புத ஞான நூலின் நிறைவு; இந்த அருமையான பக்தி இலக்கியத்தின் முடி: இந்த அருளநுபவ விருந்தின் இறுதி. அலங்காரத்தின் முதலும் முடிவும் அழகாக ஒரே சுருதியாக அமைந்திருக்கின்றன என்பதை நாம் அறிந்து மகிழ வேண்டும்.