பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை கிறார். இன்ன இன்னபடி அவனை வணங்குங்கள், நல்ல காரி யத்தைச் செய்யுங்கள் என்று வழி காட்டுகிறார். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கிறார். இவையாவும் அவருக்கு நம்மிடம் உள்ள கருணையைப் புலப்படுத்துவனவே. இவற்றிற்கு மேலே, நாம் செய்யும் குற்றங்களைத் தாம் செய்ததாகப் பாடு கிறார்; இது அவருடைய பெருங் கருணையைக் காட்டவது கந்தர் அலங்காரத்தில் மேலே சொன்னவற்றிற்கெல்லாம் உதாரணங்கள் உண்டு. திடீரென்று ஒருவர் கந்தர் அலங்காரத்தைப் பிரித்துப் பார்க்கிறார். "சிந்திக்கி லேன்நின்று சேவிக்க லேன்தண்டைச் சிற்றடியை வந்திக்கி லேன்ஒன்றும் வாழ்த்துகி லேன்மயில் வாகனனைச் சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேன்உண்மை சாதிக்கிலேன் புந்திக்கி லேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே" என்ற பாடல் தென்படுகிறது. அல்லது இதைப் போல அருண கிரியார் தம்மை இழிவாக, குற்றமுள்ளவராக, கூறிக்கொள்ளும் பாடலை அவர் பார்க்கிறார். அருணகிரியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளாத அவர் என்ன நினைப்பார்? இந்தப் பாடல் களைப் பாடினவர் நம்மைபோலக் குறைபாடுடையவர்போல இருக்கிறது என்ற எண்ணம் தோன்றலாம். அநுபூதி அடையாளம் உண்மையை உணரவேண்டுமானால் அலங்காரத்தின் முதலையும் முடிவையும் பார்க்க வேண்டும். அப்போது தெள்ளத் தெளிவாக அவருடைய நிலை தெரியும். அந்த இரண்டும் இரண்டு எல்லைக் கற்களைப் போல நிற்கின்றன. இரண்டும் அருணகிரி நாதர் அநுபூதிமான் என்பதை விளக்கும் அடையாளங்களாக உள்ளன. இடையிலும் அவருடைய அநுபவத்தை விளக்கும் பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தேடிப் பார்க்கப் பொறுமை இல்லாவிட்டால் முதலையும் முடிவையும் பார்த்தால் அவர் நிலை தெளிவாகும். எப்படித் தொடங்கினாரோ அப்படியே முடித்திருப்பதைக் காணலாம். . ஆகவே, கந்தர் அலங்காரத்தின் முதலும் முடிவும் ஒத்து அழகாக நிற்பதோடு, அருணகிரியாரின் உண்மையான நிலையை 3.Glòr.VI-21 325