பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை இந்த மூன்றையும் அன்றி, தமக்கு அருள் செய்தவனை அடையாளம் காட்டும் பகுதியும் பாட்டில் இருக்கிறது. கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் என்பது அது; முருகனைச் சொல்லும் பகுதி. வேலோன் தொண்டரிற் கூட்டினான்; அதனால் விடுதலை கிடைத்தது; விலங்கு தறியுண்டது என்று முழுப்பாட்டும் தொடர்புடைய பொருளோடு நிற்கிறது. இடுதலைச் சற்றும் கருதேனைப், போதம் இலேனை, அன்பால் கெடுதல் இலாத் தொண்ட ரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன்; பிறவி அறஇச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினைவிலங்கே. தொண்டரோடு சேர்தல் 'முருகன் எனக்குப் பிறவியினின்றும் விடுதலை உண்டாக வும், வினைநீக்கம் ஏற்படவும் வழிகாட்டினான் என்று சொல் லும் இந்தப் பாட்டில் தொண்டர்களோடு சேர்ந்ததே அந்த வழி என்று சொல்கிறார். 'நானாகத் தொண்டரோடு கூடும் இயல்பு இல்லாதவன். முருகன் என்னை அவர்களோடு கூடச் செய்தான். அதன் பயனாக உடம்பினின்றும் விடுதலையும் பாச நீக்கமும் உண்டாயின என்கிறார். தொண்டரோடு கூடுவதற்குச் சில தகுதிகள் வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் தொண்டரோடு உறவாடும் இயல்பு தானே வந்து அமையும். அந்தத் தகுதி இன்மையால் அந்த இயல்பும் இல்லையாயிற்று. தொண்டர் கூட்டத்தைப் பற்றிக் கொள்ளாமைக்குக் காரணம் வேறு பற்றுக்கள். செல்வத்தைப் பற்றுதல் நாம் இப்போது மிகவும் அதிகமாகப் பற்றிக் கொண்டிருக்கும் பொருள் செல்வம். எல்லாப் பொருள்களையும் பெறுவதற்குக் கருவியாக இருப்பது பணம். அதை எல்லாப் பொருள்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லலாம். வெவ்வேறு பண்டங்களிடத்தில் ஆசையுடைய மனிதன் வேண்டும்போது அவற்றை வாங்கிக் கொள்வதற்கு ஏற்ற கருவியாகிய பணத்தைச் சேகரித்து வைத்துக் 329