பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வேண்டும். அப்படிச் செய்தால் தொண்டரோடு கூடலாம். அந்தப் பயிற்சியும் என்னிடம் இல்லை. அதாவது, நான் ஈகை இயல்பு உடையவன் அல்லன்' என்று எண்ணிய அருணகிரியார் அந்த எண்ணங்களையெல்லாம் சுருக்கி, இடுதலைச் சற்றும் கருதேனை என்கிறார். பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை எள்ளள வேனும் கருதாதவன் நான் என்று கூறுகிறார். முதல் பாட்டிலும் இந்தச் சற்றும் என்ற சொல் வருகிறது. "பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை' என்று இருக்கிறது அல்லவா? இடுதல் என்பது பெரும்பாலும் சோறு இடுவதையே குறிக்கும். 'இருபிடி சோறுகொண்டு இட்டு உண்டு இரும்' என்று ஒரு பாட்டில் வந்ததைப் பார்த்தோம். ஆனால் இங்கே இடுதல் என்பது எல்லாப் பொருளையும் கொடுக்கும் செயலைக் குறிக்க வந்தது. ஈதல் என்ற சொல்லின் பொருளிலேதான் இங்கே அச்சொல் அமைந்திருக்கிறது. இங்கே, 'இடுதலைச் சற்றும் செய்யேனை என்று அருண கிரியார் சொல்லவில்லை; சற்றும் கரு தேனை என்கிறார். கொடுக்க வேண்டும் என்ற நினைப்புக்கூட இல்லாதவன் என் பதில் பற்றுள்ளத்தின் கடுமை நன்றாகப் புலனாகிறது. அன்றியும் ஈகைக்கு வித்து மனத்திலே தோன்றுகிற எண்ணந்தான். அது தோன்றி வளர்ந்தால் பிறகு உறுதி பெற்றுச் செயலாக விளையும்; அதனால் ஒளவைப் பிராட்டி, 'அறம் செய விரும்பு’’ என்று மனத்தின் செயலாகிய விருப்பத்தைச் சொன்னாள். 'எனக்கு அந்த முதல் படிகூடத் தட்டுப்படவில்லையே! என்று அங்க லாய்க்கிறார் அருணகிரியார். ஈகையின் வகை FFகை பல வகைப்படும். அறங்கள் முப்பத்திரண்டு என்று ஒரு கணக்கு உண்டு. காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மை முப்பத் 333