பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திரண்டு அறங்களையும் செய்தாளாம். பசுமாட்டுக்குப் புல் வாங்கிப் போடுவது ஒர் அறம். புல் விலைக்கு வாங்கிப் போட முடிய வில்லை என்றால், புல் உள்ள இடத்திற்கு மாட்டை ஒட்டிக் கொண்டு சென்று மேய்த்து வந்தாலும் புண்ணியம் உண்டு. பசுமாடு சொரிந்து கொடுப்பவர்களிடத்தில் வந்து நிற்கும்; தன் அலைதாடியைக் காட்டும். அதைச் சொரிந்து கொடுப்பது ஒரு தர்மம். பழங்காலத்தில் பசுமாடுகள் தினவு தீர உராய்ந்துகொள் வதற்குக் கல்தூண் ஒன்று நடுவது உண்டு. அதற்கு ஆவுறிஞ்சு தறி என்று பெயர். அதுவும் ஒரு தர்மம். எல்லோரும் செய்வதற்கு ஏற்றபடி அறங்களிற் பலவகை உண்டு. "யாவர்க்கும் ஆம்இறை வற்கொரு பச்சிலை: யாவர்க்கும் ஆம்பசு வுக்கொரு வாயுறை: யாவர்க்கும் ஆம்உண்ணும் போதொரு கைப்பிடி; யாவர்க்கும் ஆம்பிறர்க் கின்னுரை தானே.” இது திருமூலர் திருமந்திரம். எவ்வளவு எளிதாகச் சொல்லியிருக் கிறார் மனிதப் பிறவி எடுத்தவர் யாவராயினும் இந்தத் தர்மங் களைச் செய்ய முடியுமாம். நல்ல வார்த்தை சொல்வதுகூட ஒரு தர்மமாம். - 'இப்படி எத்தனையோ அறங்கள் இருக்கின்றனவே; அவற் றில் ஒன்றும் நான் செய்யவில்லை. என் பற்றுக் கெடுவதற்கு ஈகையே வழியென்று சிறிதளவாவது நான் சிந்திக்கவே இல்லையே! என்கிறார். இடுதலைச் சற்றும் கருதேனை. போதம் இன்மை இப்படி ஒரு குற்றத்தைச் சுமத்திக்கொண்டார். அடுத்தபடி மற்றொன்றைச் சுமத்திக் கொள்கிறார். போதம் இலேனை. போதம் - அறிவு. அதுவே ஞானம். நாம் யார், நமக்குப் பெரிய துன்பமாக உள்ள பிறப்பு எப்படி வந்தது, இந்தத் துன்பத்தைப் போக்குவது எப்படி, இறைவன் இயல்பை உணர்ந்து அவன் அருளைப் பெறுவது எவ்வாறு என்று இவை 334