பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அவன் என்ன செய்தான்? 'முருகனுடைய திருவருளை நாடி வந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம்; பற்று அற்றவர்களாய், ஞானச் செல்வர்களாய், இறைவனுடைய திருவடியை அன்றி வேறு அறியாதவர்களாய், அவனை நினைத்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகுபவர்களாய் விளங்குபவர்கள். அந்தக் கூட்டத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டான். கங்கையிலே போய் விழுகிற சாக்கடையைப் போல நான் அவர்களோடு கலந்துவிட்டேன். பாலில் கலந்த தண்ணீரைப்போல அவர் களோடு வேறுபாடின்றி இணைந்துவிட்டேன். 'என்னுடைய செயலின்படி நான் ஒழுகினால் தொண்டர் கூட்டத்துக்கும் எனக்கும் நெடுந்துாரம் இருக்கும். இனம் இனத் தோடே சேரும் என்பார்கள். இடுவதை அறியாத லோபிகளும் ஞானத்தை அறியாத அஞ்ஞானிகளுமே என்னுடைய கூட்டாளி களாக இருந்தார்கள். என் இயல்புக்கு ஒத்த கூட்டமாக அவர்கள் கூட்டம் இருந்தது. அப்படி இருந்த என்னைத் தொண்டர் கூட்டத் தில் சேர்த்துவிட்டான் ஆண்டவன். அதன் பின் அவர்கள் என்னைத் தள்ளிச் சென்றார்கள். முன்னேறாமல் நின்றால் கூட்டம் என்னை உந்தியது. நான் எவ்வளவு முயன்றாலும் பின்தங்க முடியாதுபோல் இருந்தது. வேகமான நீரோட்டத்தில் விழுந்துவிட்டால் அதன் போக்கிலே இழுத்துச் செல்லப்படுவதுதானே இயல்பு? அப்படி ஆகிவிட்டேன் நான. ஆச்சரியம் 'இதில் ஆச்சரியம் என்ன வென்றால், முன்பெல்லாம் முன்னேறுவ தென்பது இன்னது என்பதே தெரியாமல் இருந்த யான், பொல்லா இனத்தினின்றும் பிரிய வேண்டும் என்ற எண்ணமே அறியாத யான், இப்போது என்னையே அறியாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். என் முயற்சி அன்று இது. நான் எந்தக் கூட்டத்தின் நடுவில் இருக்கிறேனோ அந்தக் கூட்டம் என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது; என்னை முன்னேற்றிக் கொண்டே போகிறது. - 336